சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், சென்னையில் பல்வேறு இடங்களில் சென்னைபெருநகர காவல்துறை சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வடக்கு மண்டலம், வண்ணாரப்பேட்டை காவல்மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில்இன்று (25.10.2025) காசிமேடு மீன் மார்கெட் மற்றும்சமுதாய நல கூடத்தில் போதை பொருட்களுக்குஎதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேற்படி போதை பொருட்களுக்கு எதிரானவிழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வடக்கு மண்டலம்அவர்கள், போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதுமற்றும் குடும்பத்தார் மற்றும் குழந்தைகளை போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுப்பதுசம்பந்தமாக உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பொதுமக்கள் கள்ளத்தனமானபோதைப்பொருள் மற்றும் மது விற்பனை சம்பந்தமாகதகவல் தெரிவிக்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இலவசசேவை எண்.10581பற்றி பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு போதையில்லா தமிழகம் மற்றும் போதையில்லா இளைஞர் சமுதாயம் உருவாக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல மதுவிலக்குஅமலாக்கப் பிரிவு உதவி ஆணையாளர், காவல்ஆய்வாளர் மற்றும் சுமார் நூற்றுக்கும்மேற்பட்டபொதுமக்கள் கலந்து கொண்டனர் .
சென்னை பெருநகர காவல்துறை சார்பாககாசிமேடு பகுதியில் போதைப் பொருட்களுக்குஎதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
