இராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் ஆண் நபரை கொலை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது.

சென்னை, மணலி, செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தசக்கரபாணி, வ/65, த//பெ.சுந்தர்ராவ் என்பவர் 10.05.2022 அன்று காலை வீட்டிலிருந்துஅவரது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும், காணாமல் போன அவரை கண்டுபிடித்து தருமாறும், 11.05.2022 அன்று M-6 மணலி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதில், வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்யப்பட்டது. இந்நிலையில், காணாமல் போன தந்தை சக்கரபாணியை அவரது மகன்நாகேந்திரன் என்பவர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நாகேந்திரன், 13.05.2022 அன்று இராயபுரத்தில் உள்ள சக்கரபாணிக்கு தெரிந்த நபரின் வீட்டின்வாசலில் தந்தை சக்கரபாணியின் இருசக்கர வாகனம் இருந்ததை கண்டு நாகேந்திரன்மேற்படி வீட்டிற்கு சென்று அங்கிருந்த பெண்மணியிடம் அவரது தந்தையை பற்றிவிசாரித்தபோது, சக்கரபாணி இங்கு வரவில்லை எனக் கூறி வாக்குவாதம் செய்துநாகேந்திரனை வெளியே அனுப்பியதாகவும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும், ஆகவே, மேற்படி வீட்டில் சந்தேகமுள்ளதாகவும் நாகேந்திரன் N-1 இராயபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

N-1 இராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்நாகேந்திரன் குறிப்பிட்ட, இராயபுரம், கிரேஸ் கார்டன் தெருவில் உள்ள வீட்டிற்கு சென்றுபார்த்தபோது, வீட்டில் யாருமில்லாத நிலையில், ஆண் நபர் சடலம் இருந்ததும், அதனருகில் சக்கரபாணி அணிந்திருந்த சட்டை பேண்ட் இருந்ததும் தெரியவந்தது. ன்பேரில், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குஅனுப்பி வைத்து விசாரணை செய்தனர்மேலும், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி சடலம்கிடந்த வீட்டில் வசித்து வந்த வசிம் பாஷா, வ/36 மற்றும் அவரது அக்கா தமீம் பானு, பெ/வ.39 ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், மணலி, செல்வ விநாயகர் கோயில் வசித்து வந்த சக்கரபாணி, அங்கு பேன்சி ஸ்டோர்ஸ் கடை நடத்திக் கொண்டு, பைனான்ஸ் என்ற பெயரில் வட்டிக்குபணம் கடன் கொடுத்து வந்ததும், சுமார் 3 வருடங்களுக்கு முன்பு மேற்படி தமீம்பானுமற்றும் அவரது தம்பி வசிம் பாஷா ஆகியோர் மணலியில் சக்கரபாணியின் வீட்டினருகில்உள்ள பகுதியில் வசித்தபோது, தமீம்பானு, சக்கரபாணியிடம் பணம் கடன் வாங்கி வந்தநிலையில் அறிமுகமானதும், சக்கரபாணி 10.05.2022 அன்று இராயபுரத்தில் வசிக்கும்தமீம்பானுவின் வீட்டிற்கு சென்று வாங்கிய பணத்தை கேட்டபோது, இருவருக்கும்வாக்குவாதம் ஏற்பட்டதும், அப்பொழுது சக்கரபாணி, தமீம்பானுவின் கையை பிடித்துஇழுத்து தகாத வார்த்தைகளால் பேசியுயபோது, தமீம்பானுவின் தம்பி வசிம்பாஷாஎன்பவர் சக்கரபாணியை தள்ளிவிட்டதில், சக்கரபாணி சுவற்றில் தலை மோதி கீழேவிழுந்ததும், உடனே வசிம்பாஷா மற்றும் தமீம்பானு ஆகியோர் வீட்டிற்குள் இருந்தகத்தியை எடுத்து வந்து சக்கரபாணியை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளதும்தெரியவந்தது.

இந்நிலையில் தமீம்பானு வசிக்கும் வீட்டின் 2வது மாடியில் வசிக்கும் டில்லிபாபுஎன்ற ஆட்டோ ஓட்டுநரிடம் தமீம்பானுவும், வசிம் பாஷாவும், தாங்கள் கொலைசெய்துவிட்டதாகவும், உடலை மறைக்க உதவி வேண்டும் என கேட்டபோது, டில்லிபாபுவும் ஒத்துக் கொண்டு உடலை மறைக்க உதவி செய்துள்ளது தெரியவந்ததுஅதன்பேரில், மேற்படி சம்பவம் குறித்து N-1 இராயபுரம் காவல் நிலையத்தில்கொலை வழக்குப் பதிவு செய்து, எதிரிகள் 1வசீம்பாஷா, வ/36, த/பெ.மெகபூப் பாஷா, கிரேஷ் கார்டன் 3வது தெரு, 3வது மாடி, இராயபுரம், சென்னை, 2.தமீம்பானு, பெ/வ.39, க/பெ.அஸ்லாம் உசைனி, 3.டில்லிபாபு, வ/29, த/பெ.குமார், அதே முகவரி, 2வது மாடி ஆகிய3 நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்விசாரணைக்குப் பின்னர் எதிரிகள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படஉள்ளனர்.