போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 22.07.2025 அன்று தாம்பரம் மாநகர காவல்துறை, போதைப் பொருட்கள் ஒழிப்பு குழுவின் அனுமதியுடன், கைப்பற்றப்பட்ட 833.5 கிலோ, கஞ்சாவை அழித்துள்ளது. இந்த கஞ்சா, தாம்பரம் மாநகர காவல் எல்லைகளில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, செங்கல்பட்டு மாவட்டம், செங்குன்றம், தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள ஜி.ஜே. மல்டிகிலேவ் நிறுவனத்தில், அழிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்படும் போதைப்; பொருட்களின் ஆபத்தான தன்மை, விரைந்து அழிந்துபோகும் தன்மை மற்றும் சரியான சேமிப்பு இடங்களின் குறைபாடு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு, விதிகளின்படி, தாம்பரம் மாநகர காவல்துறை பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அழிப்பு நடவடிக்கை, சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றி, உரிமம் பெற்ற எரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்முறை, மூத்த காவல் அதிகாரிகளின் தலைமையில், முழு வெளிப்படைத்தன்மையுடனும் மற்றும் சட்டத்தின் நடைமுறையை, பின்பற்றப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகர காவல்துறை, போதைப் பொருட்களை அழிப்பதன் மூலம், போதைப் பழக்கம் மற்றும் கடத்தலை ஒழிக்க தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. 2025ஆம் ஆண்டு இதுவரை 1,304 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது. தற்போது 22.07.2025 அன்று கூடுதல் 833.5 கிலோ கஞ்சர் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,000 கிலோவுக்குமேல், கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அழிக்கும் நடவடிக்கை, போதை ஒழிப்பு குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்த முயற்சி, “போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிக்கவும், போதைப் பொருட்கள் கடத்தல் வலையமைப்புகளை முறியடிக்கவும் அரசு மற்றும் காவல்துறை இணைந்து மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கையாக இது விளங்குகிறது.” போதைப்; பொருட்கள் ஒழிப்பு மற்றும் பொது மக்களின் உடல் மற்றும் மனநலத்தைக் காக்கும் நோக்குடன் தாம்பரம் மாநகர காவல்துறை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.