*பள்ளிச்சட்டம்பி’ படத்தில் கயாடு லோஹரின் தோற்றம் வெளியானது

டிஜோ ஜோஸ் ஆண்டனி  இயக்கத்தில் டொவினோ தாமஸ்  கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’  திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர்  கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கதாபாத்திரத்தின் பதாகை வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த பதாகையில் கயாடு லோஹர் ஒரு விண்டேஜ்  தோற்றத்தில் காட்சியளிக்கிறார்..*********

இருப்பினும் படத்தில் அவரது கேரக்டரின் பெயரை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. கன்னட திரைப்படமான ‘முகில்பேட் ‘ ( Mugilpete) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’ எனும் தமிழ் திரைப்படம் – அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பள்ளிச்சட்டம்பி – கயாடு லோஹரின் மூன்றாவது மலையான திரைப்படமாகும். துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ எம் கேம்’ படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. கயாடு லோஹர் பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.