ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த  05.04.2035 L.P.F  தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க  முடிவிற்கு இணங்க, 08.04.2025. செவ்வாய்கிழமை சென்னையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(EPF )ஆணையர் அலுவலக வளாகம் முன்பு ,அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மற்றும்,ஒன்றிய  அரசு தொழிலாளர்களை  வஞ்சிக்கும் போக்கினை கண்டித்தும், அனைத்து தொழிற்சங்களின் சார்பில்  ஆர்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் பங்கேற்ற சிறப்புமிகு ஆர்பாட்டத்தில்  U.T.U.C -யின் தேசியக்குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான தோழர் க.தேசிங்.   M.A.M L.,மாநில  செயலாளர் தோழர் N.பழனி. R.S.P.யின் தென் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் க.தனபால். U.T.U.C-யின் வட சென்னை மாவட்ட செயலாளர் தோழர் J.செந்தில் குமரன்,U.T.UT.C யின் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினரும்,மின் பனியாளர் சங்கத்தின் வடக்கு திட்ட தலைவர் தோழர் ஜெய் கணேஷ், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் கராத்தே கவுதமன்,ஐக்கிய மகிளா சங்கத்தின் அகில இந்திய  துனை தலைவர் கு.காமாட்சி அவர்கள் தலைமையில்  தென் சென்னை   ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தோழர் கோமள வல்லி,மற்றும் தோழர்கள் பிரியா சக்திவேல்,T.ராணி, விஜய லட்சுமி  P.சந்தோசம்மாள்.மற்றும் மின்வாரிய  தொழிலாளர் சங்கத்தின் தோழர்கள் உட்பட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.நிறைவாக அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் ஆணையாளர் அவர்களை சந்தித்து கொடுக்கப்பட்ட மனு மீது உரிய கவனம் செலுத்தப்படும் என ஆணையாளர் கூறினார்.