இந்திய திரையுலகின் பன்முக நாயகன், மியூசிகல் ராக்ஸ்டார், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஒவ்வொரு ஆல்பத்திலும், கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவற விடாமல் சார்ட்பஸ்டர் ட்யூன்களைத் தொடர்ந்து தருவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே. தேவி ஸ்ரீ பிரசாத் எனும் ராக்ஸ்டார் டிஎஸ்பியின் சமீபத்திய ஆல்பமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் ஸ்ரீவல்லி, ஓ போலேகா யா ஓ ஓ ஓ போலேகா மற்றும் சாமி சாமி ஆகிய பாடல்கள் இந்திய திரை இசை உலகையே பெரும் சலசலப்புக்கு உள்ளாக்கியது, சமூக வலை தளங்களில் இப்பாடல்கள் மில்லியன் கணக்கான ரீல்கள், பார்வைகள் மற்றும் விருப்பங்களை கடந்து சாதனைகள் படைத்து வருகிறது. தேவி ஶ்ரீ பிரசாத்தின் தொடர்ச்சியான வெற்றிகரமான ஆல்பங்கள், டி எஸ் பி எனும் பிராண்டாக அவருக்கென ஒரு தனித்த இடத்தை இந்திய அளவில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ‘புஷ்பா – தி ரைஸ்’ படத்தின் வெற்றிகரமான சார்ட்பஸ்டர் பாடல்கள், இந்திய இசை அரங்கில் மறுக்கமுடியாத வகையில் வெளியான ஒவ்வொரு மொழியிலும் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த ஆல்பத்தின் வெற்றியானது இசை தளங்களில் மட்டும் நின்றுவிடாமல், சமூக ஊடக ரீல்களின் விருப்பமிகு தேர்வாகவும் மாறியுள்ளது, அங்கு ரசிகர்கள் அதிக உற்சாகத்துடன் இந்த ஆல்பத்தை கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில்.., “புஷ்பா – தி ரைஸ் என் இசை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் இசையில் எனது புதிய அணுகுமுறையை நம்பியதற்காக சுகுமார் சார், ஐகான்ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. பின்னணிப் பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் நடிகர்களின் மாயாஜால திரை ஆளுமை எல்லாம் தான் இந்த வெற்றிக்கு ஆதாரமாக அமைந்தது. எனது இசைக்காக அன்பையும் ஆசீர்வாதத்தையும் என் மீது பொழிந்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி, எனது வாழ்க்கை முழுவதும் உங்களிடமிருந்து இதே அளவு ஆதரவைப் பெறுவேன் என்று நம்புகிறேன் என்றார்.

தற்போது தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பாலிவுட்டில் உள்ள பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. டிஎஸ்பி ஏற்கனவே தமிழ், தெலுங்கு, பாலிவுட் மற்றும் சில தனி ஆல்பம் சிங்கிள்களில் மிகவும் பிஸியாக இயங்கிகொண்டிருக்கிறார்.

மக்கள் தொடர்பு: டி.ஒன்.