கற்புக்கரசி கண்ணகி (சித்திரைத் திங்கள் முழு நிலவு நாள்) விழா

சித்திரைத் திங்கள் முழு நிலவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள கண்ணகி திருவுருவச் சிலைக்கு 16.04.2022 அன்று காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு அரசின்சார்பில் அமைச்சர்கள் கலந்துகொண்டு, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதைசெலுத்த உள்ளார்கள்தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாகத் திகழும் வீரம்செறிந்த தீரப்பெண்மணி, காவிய நாயகி கண்ணகி ஆவார்.தமிழர் பண்பாட்டின் அருமை பெருமைகளை அனைத்துதரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில், பேரறிஞப்பெருந்தகை அண்ணா அவர்களின் எண்ணப்படி, 1968ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டினை முன்னிட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் சிலம்புச்செல்வர் மா.பொ.சி. அவர்களால் 1968ஆம் ஆண்டு சனவரித்திங்கள் 2ஆம் நாள் கண்ணகியின் திருவுருவச் சிலையை திறந்து வைக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கண்ணகியின்அருமை பெருமைகளை ‘‘காவிய நாயகி, கற்புக்கரசி, கலாச்சாரப் பொக்கிஷமாய்த் திகழ்ந்தகவள் கண்ணகிதமிழர்களின் பண்பாட்டுச் சின்னமான கண்ணகியின் புகழ்வாழ்க, காவிய நாயகி கண்ணகியின் கீர்த்தி வாழ்க, கொற்றவனே குற்றம் புரிந்தவன் நீ; வீரம் செறிந்த தீரப்பெண்மணி கண்ணகியின் புகழ் வாழ்க! வாழ்க!“ என்று போற்றியுள்ளார்.  மேலும், இடைப்பட்ட காலத்தில் கண்ணகியின் சிலை கடந்த 2001ஆம் ஆண்டு அகற்றப்பட்டதை எதிர்த்து நடந்த பல்வேறு அறப்போரட்டங்களின் எதிரொலியாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றபின், 03.06.2001 அன்று அதே இடத்தில் கண்ணகி திருவுருவச்சிலையினைத் திறந்து வைத்தார்கள்தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத்திங்கள் முழுநிலவு நாள் அன்று சென்னையில், தமிழ்நாட்டின்கலாச்சாரச் சின்னமாகத் திகழ்ந்து வரும் கற்புக்கரசி கண்ணகியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்றஅமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.