ஸ்டாலின் நடவடிக்கையால் அதிமுக அதிர்ந்து போயுள்ளது.

ஸ்டாலின் சமீபத்தில் டெல்லி சென்றபோதுகூட, இந்த விவகாரத்தை பற்றிதான் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது. அதற்கு டெல்லி மேலிடமும் ஓகே சொல்லி உள்ளது. இதற்கு பிறகுதான், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமியிடம், கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கும்படி, அரசு வாய்மொழியாக உத்தரவிட்டதாம்..
இதைதவிர, அமைச்சர்களிடமும், அவர்கள் துறைகளில் நடந்த முறைகேடு, ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்து, கந்தசாமியிடம் வழங்கவும், வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறையில் நடந்த ஊழல் குறித்த விபரங்களை, தோண்டி எடுக்கும் பணி துவங்கியதாக கூறப்பட்டது.

மேலும், “பாரத் நெட் டெண்டரில்” நடந்த முறைகேடுகள், உணவு தானியங்கள் கொள்முதலில் நடந்த முறைகேடுகள், உள்ளாட்சி துறையில் நடந்துள்ள ஊழல்கள், மீன் வளத்துறையில் “வாக்கி டாக்கி” ஊழல், சுகாதாரத் துறையில் கொரோனா சிகிச்சை மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த ஊழல் போன்றவை குறித்த விபரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருவதாகவும் கடந்த வாரம் முழுவதும் தகவல்கள் வந்தன. இப்போது விஷயம் என்னவென்றால், கடந்த ஆட்சியில நடந்த ஊழல் குறித்த விசாரணையை துவங்கலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திமுக அரசு அனுமதி தந்து விட்டதாம்..

இந்த விஷயம் தெரிந்ததும் மாஜிக்கள் அலர்ட் ஆகி உள்ளனர்.. அதிலும் குறிப்பிட்ட கொங்கு மண்டல 2 மாஜிக்களும் தங்கள் மாவட்ட வக்கீல் அணியிடம் ஆலோசனை நடத்த தொடங்கி விட்டார்களாம். அதுமட்டுமல்ல, திறமையான வக்கீல்கள் 3 பேரை தேர்ந்தெடுத்து, தங்களுக்கு எதிரான வழக்குகளில் வாதாட வேண்டும் என்று சொல்லி உள்ளார்களாம்.. இவர்களாவது பரவாயில்லை 3 வக்கீல்கள், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 30 வக்கீல்களை அழைத்து ஆலோசனை நடத்தினாராம்..
திமுக அரசு வழக்கு போடாமல் லேசில் விடாது என்ற உறுதி அதிமுக மேலிடத்துக்கே தெரிந்துள்ளது. எனவே தான் அதை எப்படி எதிர்கொள்வது என்ற முயற்சியில் முழு மூச்சாக இறங்கிவிட்டதாம்.  
ஏற்கனவே சசிகலாவை சமாளிக்க முடியால் அதிமுக திணறி கொண்டிருக்கிறது.. தூத்துக்குடியில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானமே நிறைவேற்றியாகிவிட்டது. .அதிலும் அதிமுக சேலம் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மற்ற மாவட்டங்களில் நிறைவேற்றுவதில் சில மாவட்ட நிர்வாகிகளே வேறுபட்டிருக்கிறார்களாம்.. இப்போது ஸ்டாலின் தன் பணியை தொடங்கி உள்ளார்.. இனி விடாது திமுக..