உலக சாதனை படைத்த “ஆண் பாவம் பொல்லாதது”

டிரம்ஸ்டிக்ஸ் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் , பிளாக்‌ஷிப் இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் , ரியோ ராஜ்- மாளவிகாவின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் “ஆண் பாவம் பொல்லாதது”.  இந்த படத்தினுடைய காணொளிக் காட்சி  உலக சாதனையை புரிந்துள்ளது … இதன் மூலம் , “உலகிலேயே அதிகபட்ச நபர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட திரைப்பட முன்னோட்டக் காணொளி “ எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம்.  இந்த நிகழ்வில் 8000 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்து அனைவரும் ஒன்று சேர்ந்து , தங்கள் சமூக ஊடக கணக்குகளிலிருந்து ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை பதிவேற்றம் செய்தனர். இந்நிகழ்வு ஈரோடு எக்ஸெல் கல்லூரியில்  நடைப்பெற்றது.******

“மாணவர்களின்  உற்சாகமும் , ஊக்குவிப்பும் தான் இந்த உலக சாதனையை சாத்தியப்படுத்தியிருக்கிறது, குழுவிற்கு வாழ்த்துகள்” என சாதனை கேடையத்தை வழங்கிப் பேசினார், உலக சாதனை இயக்ககத்தின்  அதிகாரி Ms.Alice Raynaud … “படம் பெரும்பாலும் மக்களோடு ஒன்றிப்போகும் என்பதாலேயே , இதை மக்களை வைத்தே ரிலீஸ் செய்ய முடிவெடுத்தோம் .. இந்த உலக சாதனையை  பெருவெற்றியாக்கிய , எக்ஸெல் நிறுவனத்திற்கும் மாணவர்களுக்கும் நன்றிகள் என மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார் , திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி சக்திவேல் அவர்கள் …  “இது எனது ஊர் .. நான் வளர்ந்த ஊரில் இவ்வளவு பிரம்மாண்டமாய் என் படத்தின் ஒரு நிகழ்வு நடந்தேறும் என ஒரு போதும் நான் எண்ணியதில்லை , ஆனால் அதற்காக உழைத்துக்கொண்டேதான் இருந்திருக்கிறேன் “ என படத்தின் கதாநாயகன் ரியோ ராஜ் நெகிழ்ந்து பேசினார் …

“இங்கிருந்து சினிமாவில் ஜொலிக்கும் ஒரு குழுவிற்கு , இந்த மண்ணில் இப்படி ஒரு விழா எடுப்பது எங்களுக்கே பெருமை” என சிலாகித்தார் எக்ஸெல் கல்லூரி நிர்வாக இயக்குனர் திரு.மதன் … இணை தயாரிப்பாளர் விஜயன் , கதாநாயகி மாளவிகா மனோஜ், நடிகர் விக்னேஷ்காந்த் , இயக்குனர் கலையரசன் , டிரம்ஸ்டிக்ஸ் மணிகண்டன் , விவேக் என அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர. சாதனைப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் “ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் , அக்டோபர் 31 முதல் உலகெங்கிலும் வெளியாகிறது.