சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள’ மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தில் காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் அறிவியல் சார்ந்த புனைவு கதை எழுதும் மூத்த எழுத்தாளராக திரையில் தோன்றுகிறார். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலஸ்ரங்கன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.********