எழில் இனியன் தயாரிப்பில் மாஸ் ரவி இயகத்தில், மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சுப்புராயன், சாய் தினா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், பாஸ்கர், தங்கதுரை, பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “காத்துவாக்குல ஒரு காதல்”. இயக்குநர் மாஸ் ரவியும் லட்சுமி பிரியாவும் அதிகளவு பாசம் கொண்ட காதலர்கள். இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, மற்றோரு பக்கத்தில் வடசென்னையில் ரவுடிகளின் ஜாம்ராஜியம் நடக்கிறது. ரவுடிகள் ஒருவருக்கொருவர் திட்டம்போட்டு கொலை செய்து கொள்கிறார்கள். இந்த கொலையில் கடைசியாக மிஞ்சியிருப்பவர் சாய் தினாதான். ஒருகட்டத்தில் காதலர் மாஸ் ரவி திடீரென காணாமல் போய்விடுகிறார். அவரைத்தேடி காதலி லட்சுமி பிரியா வீதியெங்கும் அலைகிறார். ஒரு கட்டத்தில் காதலர் மாஸ் ரவியை பார்த்தும் விடுகிறார். ஆனால் அவர்களால் ஒன்று சேரமுடியவில்லை. அது ஏன் என்பதுதான் இப்படத்தின் கதை. இயக்குநர் மாஸ் ரவி உண்மைக் காதலின் உணர்வை தனது விழிகளில் பிரதிபலிக்கிறார். மிக அற்புதமான உணர்வுகளை வெளிபடுத்தி நடித்துள்ளார். அழகு தேவதையாக தோன்றுகிறார் கதாநாயகி லட்சுமி பிரியா. அவரின் புன்சிரிப்பில் பார்வையாளர்களை கவர்ந்துவிடுகிறார். தமிழ்த்திரைவானில் நட்சத்திரமாக ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது. சூப்பர் சுப்புராயன், சாய் தினா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், பாஸ்கர், தங்கதுரை, பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி இவர்கள் அனைவரும் தஙகளது கதாபாத்திரங்களை உள்வாங்கி தங்களது திறமைகளை வெள்ளித்திரையில் வெளிபடுத்தியுள்ளார்கள். பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இசை அமைத்துள்ளார் ஜிகேவியும் மிக்கின் அருள்தேவ்வும். ராஜதுரை, சுபாஷ் மணியனின் ஒளிப்பதிவை பாராட்டவேண்டும். படத்தொகுப்பாளர்கள் கம்பம் மூர்த்தியும் ராஜ்குமாரும் திரைக்கதையில் நாயகர்களின் பின்புலத்தை அதிகளவு திணித்திருப்பதால பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டுகிறது. இதை சற்று குறைத்திருக்க வேண்டும். படம் முழுக்க ஆங்காங்கே பல மர்ம முடிச்சுகளை போட்டிருக்கும் இயக்குநர் மாஸ் ரவி, உச்சக்கட்ட காட்சிகளில் ஒவ்வொன்றாக அவிழ்த்திருப்ப்து ரசிக்கும்படி உள்ளது. காத்துவாகுல வந்த காதல் கரைந்துபோவது உண்மைக்காதலர்களின் விழிகளில் நீர் ததும்பும்.
“காத்துவாக்குல ஒரு காதல்” திரைப்பட விமர்சனம்
