காவல் நிலைய பின்னணியில் உருவாகும் காதல் படம்

பயர்பாக்ஸ் பிலிம் ஹவுஸ்  சார்பில் சரணிகா தயாரிப்பில், மணிகண்டன் செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகி  நடிக்கும் பெயரிடப்படாத புதிய படம். மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்க, முக்கியமான கதாப்பாத்திரத்தில், ஆ.வெங்கடேஷ், அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். ஒரு காவல் நிலைய பின்னணியில், ஒரு காதல் ஜோடியை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான கதை நகர்வு, வணிக ரீதியில் இப்படத்தை உருவாக்கி வருகிறார்  இயக்குநர் மணிகண்டன் செல்வராஜ்.*****

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு [05-02-26] அன்று சென்னையில் ஆரம்பமானது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் படமாக்கப்பட்ட உள்ளது. Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிக்கும் இப்படத்திற்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.