“நாங்கள்” திரைப்பட விமர்சனம்

ஜி.வி.எஸ்.ராஜு தயாரிப்பில் அவினாஸ் பிரகாஷ் இயக்கத்த்கில் அப்துல் ரஃபி, மிதுன், ரித்திக் மோகன், நித்தின், பிராத்தனா, ஷாப் ஜான் எடத்தட்டில், ராக்ஸி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நாங்கள்”. மலைப்பிரதேசமான நீலகிரியில் தேயிலை தோட்டத்துக்கு நடுவில் ஒரு பங்களாவில் பெருஞ்செல்வந்தராக தனது மனைவி மூன்று பையன்களுடன் வாழ்ந்து வருகிறார் அப்துல் ரஃபி. சூழ்நிலை காரணத்தால் அவர் ஏழையாகிவிடுகிறார். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுக்காத மனப்பான்மையால் கருத்து வேறுபாடாகி மனைவி அப்துல் ரஃபியை விட்டு பிரிந்துவிடுகிறார். தாயைப் பிரிந்த மிதுன், ரித்திக், நித்தின் ஆகிய மூவரும் தந்தையின் பாதுகாப்பில் வளர்கிறார்கள். பங்களாவில் மின்சாரக் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அரிக்கண் விளக்கிலும் மெழுகுவர்த்தியின் ஒளியிலும் கஷ்ட்ட ஜீவனம் நடத்தி வாழ்கிறார். அப்துல் ரஃபி. தனது மூன்று பிள்ளைகளையும் மிகவும் கண்மூடித்தனமான கண்டிப்பிலும் அவ்வப்போது ஈரமான பாசத்தின் வெளிபாட்டிலும் வாழ்க்கை நகர்கிறது. எதர்காக ஏழையானார்?. மூன்று பிள்ளைகளின் நிலை என்ன?. கஷ்ட்டங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்? என்பதை மீதிக்கதை விளக்குகிறது. மனைவியை பிரியும் கட்டத்திலும் பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொண்டு பின் பாசத்தை வெளிப்படுத்துவதிலும் உள்ள உணர்ச்சிப் போராட்டங்களை தன் முகத்தில் மிகத்துள்ளியமாக வெளிப்படுத்தி நடித்த்ஜ்ருக்கிறார் அப்துல் ரஃபி. மூத்த மகனாக நடித்திருக்க்ம் மிதுனின் நடிப்பு மெச்சத்தகுந்தது. நீலகிரி வனப்பகுதியின் குளிர்ச்சியான அழகை பாலுமகேந்திராவிற்குப் பிறகு இயக்குநர் அவினாஸ் பிரகாஷ் அழகாக படம் பிடித்திருக்கிறார். படம் பார்ப்பவர்களுக்கு நீலகரியில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. நீலகியின் அத்தனை அழகையும் திரையில் கொட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான அவினாஸ் பிரகாஷ். இவரின் உருவில் பாலுமகேந்திராவை காணமுடிகிறது. வெட் ஷங்கர் சுகவனத்தின் இசை தன்னறியாமல் ரசிகர்களை தாளபோட வைக்கிறது. நீலகிரி வனத்திற்கேற்ற பின்னணி இசை. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் வாழ்வதுதான் சிறப்பான வாழக்கை என்பதை எடுத்துக் கூறுகிறது இப்படம்.