விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது” – இயக்குனர் அறிவழகன் முருகேசன்

காந்திமதி பிக்சர்ஸ் என்ற  நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் “தடை அதை உடை”இத்திரைப்படம்  தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் முனோட்டக் காணொளி வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் இயக்குநர் அறிவழகன் பேசியதாவது: “இந்த விழாவில் எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் எல்லோரும் இரத்தம் வரும் அளவு உழைத்துள்ளனர். என் அப்பா படபிடிப்பில் இருந்தார். விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டமாக இருக்கிறதே என்றார். இப்படத்தில் அங்காடித் தெரு மகேஷ், நடிகர் குணா பாபு, பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.*******

எல்லோரும் சொந்த பணத்தை போட்டு எடுத்ததற்காக ஊரே திட்டிக்கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஏன் வேண்டாத வேலை என்றார்கள். ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு  இருக்கிறது.  அதற்கு காரணம் மக்களும் பத்திரிக்கையாளர்களுன் தான். நல்ல படைப்பை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நடிகர் குணா நன்றாக வர வேண்டும் வாழ்த்துக்கள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரும் அளவு திறமை இருக்கிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாடலாசிரியருக்கு சம்பளம் தரவேண்டுமே,  நம் படத்தில் யாரும் என்னை கேட்கமாட்டார்கள் என நானே பாடல்கள் எழுதிவிட்டேன். அடுத்த படத்தில் புதிய பாடலாசிரியருக்கு வாய்ப்பு தருவேன். படம்  1 மணி நேரம் 53 நிமிடம் மட்டுமே. பரபரவென போகும், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். ஒரே ஒரு விசயம் சினிமாவை வாழ விடுங்கள். சினிமா  பிஸினஸ் என்றால், ஒரு மாதம் சினிமா எடுக்காமல் இருந்தால் பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிடும், ஆனால் விமர்சகர்கள் படத்தை விமர்சிக்காவிட்டால் எதுவும் நடக்காது. தயவு செய்து சினிமாவை வாழ விடுங்கள். இந்தப்படம் உங்களை யோசிக்க வைக்கும், உங்கள் வாழ்க்கையை மாற்றும், அனைவரும் பாருங்கள் நன்றி என்றார்.

தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அறிவழகன் பாடல் வரிகள் எழுத சாய் சுந்தர் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பு  – டாய்சி  கலை இயக்கம் – சிவகுமார்,மணி 5.1 மிக்சிங் – சரவணா தீபன் தயாரிப்பு மேற்பார்வை -வேல்முருகன் நிர்வாக தயாரிப்பு – சாமிநாதன் நாகராஜன், காமராஜ் மற்றும் தமிழ்வாணன். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்