2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, திரைப்படத்தில், கியாரா அத்வானி ஏற்றுள்ள ‘நாடியா’ கதாபாத்திரத்தின் பதாகை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளியீடு, படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. பல்வேறு ஜானர்களில் தனது திறமையை நிரூபித்து, இந்தி திரையுலகின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக நிலைபெற்றுள்ள கியாரா அத்வானி, இந்தப் படத்தில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றுகிறார். இயக்குநர் கீத்து மோகன்தாஸ் உருவாக்கியுள்ள தீவிரமான, கச்சிதமான உலகத்தில், கியாராவின் இந்த பாத்திரம் அவரது திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.******
‘நாடியா’வின் ஃபர்ஸ்ட் லுக், வண்ணமயமான சர்க்கஸ் பின்னணியில், கவர்ச்சியான தோற்றத்தில் கியாராவை காட்டுகிறது. ஆனால், நுணுக்கமாக கவனித்தால், அந்த பிரகாசத்தின் அடியில் ஒரு ஆழமான துயரம், வேதனை மற்றும் மனவலி மறைந்திருப்பது தெளிவாகிறது. இதனால், ‘நாடியா’ என்பது ஒரு வழக்கமான கதாபாத்திரமல்ல; நடிகையின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும், வலுவான, உணர்ச்சி மிக்க பாத்திரம் என்பதற்கான வெளிப்பாடாக இந்த ஃபர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது.

