மருத்துவ குற்றம் பற்றிய திரைப்படம் “அதர்ஸ்”

கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்,ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ளஅருத்துவ குற்றா செயல் பற்றிய திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது. படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். இப்பசத்தின் அறுமுக நிகழ்வில் இயக்குநர் அபின் ஹரிஹரன் பேசபோது, “ஒரு வருட பயணத்திற்குப் பிறகு ‘அதர்ஸ்’ இன்று உருவாகியுள்ளது. நான் புதுமுக கதாநாயகனயே தேடினேன், அதற்காக நேர்காணல்  நடத்தி ஆதித்யா மாதவனை தேர்ந்தெடுத்தோம். கௌரி, அஞ்சு குரியன், ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பல அனுபவமுள்ள நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் சார் மிகப் பெரிய கேமராமேன் என்றாலும், எனது கற்பனையை திரையில் துல்லியமாகப் பதிவு செய்தார். ஜிப்ரான் சார் கதையின் உணர்வுகளை இசையில் உயிர்ப்பித்துள்ளார். *******

ஆதித்யா கடின உழைப்பை தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது — அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்.”

தொழில்நுட்பக் குழு: ஒளிப்பதிவு: அரவிந்த் சிங் இசை: ஜிப்ரான் பாடல் வரிகள்: மோகன் ராஜன் எடிட்டிங்: ராமர் கலை இயக்கம்: உமா சங்கர் நடிகர்கள் : ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R. சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.