தங்க முகையதீன்
————-
குகன் சக்ரவர்த்தியார் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் “வங்காள விரிகுடா குறுநில மன்னர்கள்” படத்திற்கு கதை வசனம் இசை பாடல்கள் உள்பட ஒரு திரைப்பசத்திற்கு தேவையான 21 பொறுப்புகளையும் தானே ஏற்றுக் கொண்டு ஒரு தனி மனிதனின் ஆபாரணையுடன் கின்னஸ் சாதனைக்காக இப்படம் திரைக்கு வந்திருக்கிறது. வங்காளவிரிகுடா குறுநில மன்னர்கள் யார் என்பதுதான் இப்படத்தின் கதைக்கரு. தூத்துக்குடியில் பெரும் செல்வந்தராக வாழ்ந்துவரும் குகன் சக்ரவர்த்தியாரை ஒரு பெண் காதலிக்கிறாள். ஆனால் அந்தப் பெண் வேரொருவருக்கு மனைவியாகிறாள். சில மாதங்கள் கழித்து அந்தக் காதலி தற்கொலை செய்து கொள்ள கடலுக்கு வருகிறாள். இதைப்பார்த்த குகன் சக்ரவர்த்தியார் தனது முன்னாள் காதலியை காப்பாற்றி அவளுடன் குடும்பம் நடத்துகிறார். இது ஒருபுறமிருக்க குகன் சக்ரவர்த்தியார் தூத்துக்குடி மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறார். இதைப்பார்த்த குகனின் நண்பர் விக்ரம் வாசுவின் மகள் குகன் மீது ஆசைப்படுகிறாள். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட வேண்டுமென்று மனைவி சொன்னதால், அவளுடன் இல்லற வாழ்க்கை நடத்த குகன் மறுத்துவிட்டு தன் முன்னாள் காதலியுடன் குடும்பம் நடத்துகிறார். படத்தின் முன்பகுதிவரை கதாநாயகனாக வாழ்ந்த குகன் சக்கரவர்த்தியார் படத்த்கின் பின்பகுதியில் வில்லன் அவதாரம் எடுக்கிறார். மனிதம் பாதி மிருகம் பாதி என்ற நிலையில் வாழ்ந்துவரும் குகன், உச்சக்கட்ட காட்சியில் கதாநாயகனாக மிளிர்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனிமனிதனாக தன் தோளில் திரைக்கதையை சுமந்திருக்கிறார். திரைக்கதையின் ஓட்டம் சில நேரங்களில் பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டுகிறது. பாடல்கள் அனைத்தும் கேட்டு ரசிக்கும்படி உள்ளது. கலகலப்பான படபிடிப்பு வண்ணமயமாக உள்ளது. துண்டுதுண்டுகளாக எங்கெங்கோ செல்லும் திரைக்கதை ஓட்டத்தை ஒரே புள்ளியில் கொண்டுவந்து சேர்த்க்திருக்கிறார் இயக்குநர் குகன் சக்ரவர்த்த்கியார். வங்காளவிரிகுடா குறுநில ம்ந்ன்னர்கள் யார் என்பதை உச்சக்கட்ட காட்சியில் காட்டியிருக்கும் விதம், பார்வையாளர்களை பரவசப்பட வைக்கிறது. மெரினா கடற்கரைக்கு “திராவிடர் கடற்கரை” என்று பெயர் மாற்ற வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறார் இயக்குநர் குகன் சக்ரவர்த்தியார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளுக்கு தாய்மொழி தமிழ் என்று ஒத்துக்கொண்டால் பெயர் மாற்றம் வரவேற்புக்குறியதான்.

