உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார்

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனத்தின் சார்பில்,  உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளிக்கும்  திட்டம், பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்தியா நாடு முன்னேறிய நாடு என்ற பெருமிதத்தை பெற்றிருந்தாலும், இன்றும் உணவில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நாட்டில் பெருமளவில் உள்ளது. உலக பட்டினி குறியீட்டில்  கவலையளிக்கும் நிலையில் தான் உள்ளது. இதனை மாற்றும் முனைப்பில் ஆலன் இந்த ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். கடந்த ஐந்து வருடங்களாக ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம், உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் 5000 க்கு பேருக்கு  பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல் பட்டு, சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.   ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நடத்திய இந்த வருட நிகழ்வினில்,  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் ஆதி, நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகர் மஹத், நடிகர் மைம் கோபி, நடிகர் கண்ணா ரவி, முத்துக்குமார் ஆகியோருடன்  கலந்துகொண்டு, இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.*******