கவனம் ஈர்க்கும் ‘ஹரோம் ஹரா’ திரைப்படம்

ஸ்ரீ சுப்ரமண்யேஷ்வரா சினிமாஸ் சார்பில் எஸ்.எஸ்.சி. தயாரித்திருக்கும் படம் ஹரோம் ஹரா. இந்த படத்தின் கதாநாயகனமாக சுதீர் பாபு நடிக்கிறார். ஞானசேகர் துவாராக இயக்கும் ஹரோம் ஹரா திரைப்படத்தில் கதாநாயகியாக மாள்விகா ஷர்மா நடித்துள்ளார். மேலும் லக்கி லக்ஷமன், ரவி கலே மற்றும் அர்ஜூன்கௌடா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்1980 காலக்கட்டத்தில் நடைபெறுவது போன்ற கதையம்சம் கொண்ட ஹரோம் ஹரா படத்தை இயக்குனர் ஞானசேகர் துவாரகா ஒவ்வொரு காட்சியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் படி கதையை தேர்வு செய்திருக்கிறார்.**********

இவற்றுக்கு பக்கபலமாக இருக்கும் வகையில், வசனங்களும் பட்டையை கிளப்பும் வகையில் உள்ளன.  பல எதிரிகள் தனது வீழ்ச்சிக்காக காத்திருக்கும் சூழலில், சாதாரண மனிதனாக இருந்து, நகரின் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக உருவெடுக்கும் வகையில் சுப்ரமணியம் என்ற கதாபாத்திரத்தில் சுதீர் பாபு நடித்துள்ளார்.