தானென்ற அகந்தையால் விளையும் தீமையை சொல்லும் படம் “பார்க்கிங்”

சுதன் சுந்தரம், கே.எஸ்.சினிஸ் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷ்கல்யாண், இந்துஷா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்பார்க்கிங்‘. ஒரு வாடகை வீட்டின் கீழ்தளத்தில்எம்.எஸ்.பாஸ்கர் மனைவி மகளுடன் வசிக்கிறார். வீட்டின் மேல் தளத்தில் ஹரிஷ் கல்யாண் தனது கர்ப்பிணி மனைவி இந்துஷாவுடன் வசிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின்மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தின் ஓரத்தில் ஹரிஷ் கல்யாண் தனது காரை நிறுத்துகிறார். இது பாஸ்கருக்கு இடைஞ்சலாக இருக்கிறது. இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு வருகிறது. ஹரிசுக்குபோட்டியாக பாஸ்கரும் ஒரு காரை வாங்குகிறார். ஒரே இடத்தில் இருவரும் தங்களது கார்களை நிறுத்தமுயற்சி செய்யும் போது வாய்ச்சண்டை கைச் சண்டையாக மாறி ஒருவக்கொருவர் தங்களது அகந்தையால் கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகிறார்கள். பிறகு எதனால் சமாதானம் ஆகுகிறார்கள் என்பதை இயக்குநர்மென்மையாக சொல்லியிருக்கிறார். ஒவ்வோரு காட்சியும் ரசிக்கும்படி திரைக்கதை அமைந்துள்ளது. நகைச்சுவையாளராக பார்த்து ரசித்த எம்.எஸ்.பாஸ்கரை வில்லனாக பார்ப்பது மனதுக்கு நெருடலை தந்தாலும், வில்லத்தன நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார். உணர்ச்சி கொப்பளங்களை முகத்தில் வெடிக்கும் ஹரிஷ்கல்யாணின் நடிப்பு அபாரம். படம் முழுக்க இரண்டு வில்லன்களைத்தான் பார்க்க முடிகிறது. கடைசி காட்சியில்மட்டும் இருவரும் கதாநாயகர்களாக மாறுவதை இளகிய மனதுடன் காட்டியிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குறியவர். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறது. ********