நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது இந்த காளி அவதாரம் ரசிகர்களை நிச்சயம் கவரும். குலசேகரபட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது கதை மீதான நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கிறது. கொண்டாட்டங்களின் பிரமாண்டமும், காளி நடனமும் கதைக்களத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘ஓம் காளி ஜெய் காளி’ ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிபரப்பாகும். இப்படத்தில் விமல், சீமா பிஸ்வாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, ஜி.எம்.குமார், குமரவேல், கஞ்சா கருப்பு, புகழ், பாவ்னி, ஷிவின், க்வின்சி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்*********
*தொழில்நுட்பக் குழுவினர்:* இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா, விஷூவல் எஃபெக்ட்: ஸ்ரீ விஷூவல் எஃபெக்ட், விஎஃப்எக்ஸ்: ஃபோகஸ் விஎஃப்எக்ஸ், கலரிஸ்ட்: எஸ். மாதேஸ்வரன், ஆக்ஷன் கொரியோகிராஃபர்: கே. ராஜசேகர், ஒலி வடிவமைப்பாளர்: சுதர்சனன், அனிதா, திரைக்கதை: ராமு செல்லப்பா, குமரவேல், வசனம்: ராமு செல்லப்பா, பாடல் வரிகள்: மணி அமுதவன், தயாரிப்பு வடிவமைப்பாளர்: க்ராஃபோர்ட்,
*ஜியோ ஹாட்ஸ்டார் பற்றி:* ஜியோ ஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் ஒன்றிணைப்பாகும். நல்ல கதைக்களம், புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றுடன், ஜியோ ஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.