இந்தியா முழுவதும் மத்திய பாதுகாப்பு காவல் படைகள் மற்றும் மாநில காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவல்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக பதக்கங்கள் வழங்க உள்துறை அமைச்சகம், 2018ம் ஆண்டு அரசிதழ் வெளியிட்டு, அறிவித்திருந்தது. மிகச்சிறப்பான முறையில் எவ்விததண்டனைகளுமின்றி மெச்சத்தகுந்த வகையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களுக்கு அதிஉத்கிரிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்படுகிறது. சிறப்பான முறையில் எவ்வித தண்டனைகளுமின்றி மெச்சத்தகுந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு மேலாகபணிபுரிந்து வருபவர்களுக்கு உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் சிறப்பான சேவைக்கான பதக்கம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு காவல்துறையில் 25 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலாக மெச்சத்தகுந்த வகையில் எவ்வித தண்டணைகளுமின்றி மெச்சத்தகுந்த வகையில்பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களில் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுக்கான பதக்கம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடுகாவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணி செய்பவர்களுக்கு சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும் பணிபுரிந்த 73 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உள்ளிட்ட காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் பிரிவில் (L&O, Traffic, AR. MT, & Spl. Units, IS, CCB, Vigilance) துறைகளில் பணிபுரிந்து வருபவர்கள், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என 73 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு 2020 மற்றும் 2021-ம் ஆண்டிற்கான அதிஉத்கிரிஷ்ட் சேவா பதக்கம் (மிகச்சிறப்பான சேவைக்கான பதக்கம்) மற்றும் உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) (01.03.2025) காலை, இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், கூடுதல் காவல்ஆணையாளர் (தலைமையிடம்) கபில்குமார்சி.சரட்கர், இ.கா.ப., வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர்கள் G.சுப்புலட்சுமி (நிர்வாகம்), S.மேக்லீனா ஐடன் (எஸ்டேட் மற்றும் நலன்), M.ராதாகிருஷ்ணன்(ஆயுதப்படை-1), S.அன்வர் பாஷா (ஆயுதப்படை-2), ஜெயகரன் (மோட்டார் வாகனப்பிரிவு), காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.