ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ஶ்ரீ லக்ஷ்மி பிரசாத் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க, உருவாகும் “மதராஸி” படத்தின் பதாகை மற்றும் காணொளி வெளியாகியுள்ளது. பதாகை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனின் தோற்றம் மிரட்டலாக உள்ளது. காணொளியில் இடம்பெற்றுள்ள, சிவகார்த்திகேயன் பங்குபெறும் காட்சிகள், ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்த காணொளி தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.********
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும், மிகப் பிரம்மாண்டமான படமாக இப்படம் இருக்கும். இதுவரை திரையில் தோன்றியிராத மிரட்டலான அதிரடி ஆக்சன் அவதாரத்தில், இப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் தென்னிந்தியா முழுக்க, இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்துள்ளார் வித்யூத் ஜமால். மேலும் பிஜு மேனன், விக்ராந்த், சார்பட்டா புகழ் டான்ஸிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
ஶ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனம் சார்பில் N. ஶ்ரீ லக்ஷ்மி பிரசாத் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை கெவின் குமார் மற்றும் மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கிறார்கள்.