கே.ஆர்.ஜி.கண்ணன் ரவி குழுமத்தின் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான அரசியல் நகைச்சுவை பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள திரைப்படம் “டி.என்.2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. மேலும் இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.******
தொழில்நுட்பக் குழு: திரைக்கதை & இயக்கம் – உமாபதி ராமையா கதை – தம்பி ராமையா இசை – தர்புகா சிவா ஒளிப்பதிவு – பி. ஜி. முத்தையா எடிட்டிங் – அரள் R. தங்கம் கலை – NK ராகுல் ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ நடனம் – சாண்டி, பிரவீன் தயாரிப்பு மேற்பார்வை – ஶ்ரீநாத் விஸ்வநாதன் தயாரிப்பு – கண்ணன் ரவி, தீபக் ரவி
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

