ஆபாச வீடியோவில் சிக்கிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா

சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி வீடியோ வந்துள்ளதால் பதவி விலகுவதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். வீடியோ வெளியாகியதுமே பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு போயுள்ளார் கே.டி.ராகவன் என்றால், அந்த வீடியோ எந்த மாதிரி அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியது என்பதை நீங்களே புரிந்து கொள்ள முடியும். புயலை கிளப்பிய வீடியோ.. பாஜக கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் கே.டி.ராகவன். யூடியூப்பில் வெளியான வீடியோ ஒரு யூடியூபர்தான் இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், இந்த வீடியோவில் காம சேஷ்டை செய்வது கே.டி.ராகவன் என்று குறிப்பிட்டிருந்தார். அப்படி என்ன இருந்தது அந்த வீடியோவில் என்கிறீர்களா? இதுதான் விஷயம்: யூடியூபர் கே.டி.ராகவன் என்று குறிப்பிடும் அந்த நபர், மேலாடை இல்லாமல் காட்சியளிக்கிறார். அவர் பெண் ஒருவரோடு வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கிறார்.

அப்போது அந்த பெண்ணுடன் ஆபாச செய்கைகளில் ஈடுபடுகிறார். நெஞ்சு பகுதியை தொட்டுக் காட்டுகிறார். அதேநேரம், இவரது முகம் காட்டப்பட்டாலும், பெண் முகம் ப்ளர் செய்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், அந்த பெண் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இதில் இன்னொரு கொடுமையும் நடந்தது. பூஜை அறை பக்கத்தில் போய் அமர்ந்த நபர் சுய இன்பம் செய்ய ஆரம்பிக்கிறார். அதுவும் வீடியோ காட்சியில் இடம் பெற்றுள்ளது. ஆணுறுப்பு ப்ளர் செய்யப்பட்டுள்ளபோதிலும், அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வீடியோவில் சத்தம் சரிவர கேட்கவில்லை என்றபோதிலும், நடப்பதை யூகிக்க முடிகிறது. இது ஒரு செக்ஸ் வீடியோ சாட் என்பது தெளிவாக புரிகிறது. “சத்தமாடா முக்கியம்” என்ற தூள் திரைப்பட பிரபல வசனத்தை மீம் போட்டு இந்த காட்சியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஓட்டும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இந்த நிலையில்தான், அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று கூறியுள்ள ராகவன், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இதுகுறித்து பேசியதாகவும், பிறகு ராஜினாமா செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்து ட்விட் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கட்சி மேலிடத்திடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க 6 மாத காலம் ஆகும் என்றும், நீங்கள் வீடியோவை வெளியிட்டால் வெளியிட்டுக் கொள்ளுங்கள், பெண்கள் விஷயத்தில் நாங்கள் கண்டிப்பானவர்கள் என்று அண்ணாமலை கூறியதாகவும், யூடியூப்பர் தனது வீடியோ பதிவில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்

தாம் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் செயல்பாடு காணொளியொன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தாம் வகித்து வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் கே.டி. ராகவன். தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திக்கப்போதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள இடுகைகளில்,, “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யார் என்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனுமின்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு காணொளி வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த அந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜிநாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றதன் மூலம் மாநிலம் அளவிலான அரசியல் உலகில் பரவலாக அறியப்பட்டவர். இந்த நிலையில் இன்று காலையில், மதன் டைரீஸ் என்ற யு டியூப் சேனலில், கே.டி. ராகவன் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி காணொளி ஒன்று வெளியானது. இந்த யூட்யூப் பக்கத்தை நடத்தி வருபவர். கடந்த ஆண்டு அக்போடர் மாதம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தவர். கே.டி. ராகவன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை சுமத்தும் அந்த நபர், இதுபோல மேலும் சில கட்சிப் பிரமுகர்கள் ஈடுபடுவதாகவும் அவற்றை ஒரு பத்திரிகையாளராக வெளியிடுவேன் என்றும் கூறியிருக்கிறார். காதல், காமம், பாலியல் அத்துமீறல்: ஒரு செக்ஸ் தெரபிஸ்டின் அனுபவம். ஆணை வற்புறுத்தி பெண் உடலுறவு கொண்டால் அது பாலியல் வல்லுறவா?
சட்டை அணியாத ஒரு நபர் பூஜை அறையில் அமர்ந்தபடி பெண்களை காணொளி அழைப்பில் தொடர்பு கொண்டு, ஆபாச செயல்களில் ஈடுபடுவதாக அந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த காணொளி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் வெளியிடப்படுவதாகவும் அந்த யு டியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், கே.டி. ராகவன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.