Lakshmi Creations சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில், சுகா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் முதல் ப்தாகையை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். எளிய மனிதர்கள் வாழும் உண்மையான உலகத்தை அசலாக திரையில் பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. ஒரு சைக்கிள் சக்கரத்தை மையமாக வைத்து, ஒரு கிராமத்தின் முகம், அதன் மக்கள், கோவில் உள்ளிட்ட அம்சங்களை புதுமையான காட்சியமைப்பில் வெளிப்படுத்தும் பதாகை, ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் இசக்கி கார்வண்ணன், எம். எஸ். பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பூஜா மோகன்ராஜ், கதா நந்தி, சுர்ஜித் கோபிநாத், வித்யா விஜயகுமார், யஷ்வந்த், சந்தான லட்சுமி மற்றும் மீனாட்சி ஐயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.*******
தொழில் நுட்ப குழு: கதை& இயக்கம் : சுகா தயாரிப்பு : இசக்கி கார்வண்ணன் இசை : இளையராஜா படத்தொகுப்பு (Editor) : சுரேஷ் அர்ஸ் ஒளிப்பதிவு (DOP) : மார்ட்டின் டான்ராஜ் கலை இயக்கம் : A. N. இளங்கோவன் சண்டை இயக்கம் : கனல் கண்ணன் PRO – சதீஷ் (AIM)

