லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு..!

மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளது. பிரபல பாடகியும், இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் உடல்நல குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் , விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் 2 நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில், மகாராஷ்டிராவில் நாளை பொது விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.