லத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’. வெளிநாட்டில் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், வெளிநாட்டுக்கு படிக்க செல்ல விரும்புகிறவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விசயங்களையும் மையமாக வைத்து உருவாகும் ‘டிரம்ப் கார்டு’ படத்தை ஜியோ ராஜகோபால் இயக்குகிறார். காதல் கதையாக உருவாகும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தை பூலோகம் ரவி இயக்குகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் குமார்.டி படத்தொகுப்பு செய்கிறார். ‘டிரம்ப் கார்டு’ படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் பிலாக் பாண்டி நடிக்கிறார். இவருடன் ஜி.எம்.குமார், இ.வி.கணேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.*******
இப்படங்களின் அறிமுக நிகழ்வில் நடிகரும் இயக்குநருமான இ.வி.கணேஷ் பாபு பேசுகையில், “ஒரே தயாரிப்பாளரின், ஒரே நிறுவனத்தின் இரண்டு திரைப்படங்களின் அறிமுக விழா இது. லத்திகா புரொடக்ஷன்ஸ் சசிகுமார் பாலா தயாரிப்பில் இரண்டு திரைப்படங்கள், ஒன்று ’டிரம்ப் கார்டு’. இதை ஜோ ராஜகோபால் இயக்குகிறார். மற்றொரு படம் பூலோகம் ரவி இயக்கும் ’சேரநாட்டு யானைதந்தம்’. இந்த இரண்டு இயக்குநர்களும் மிகப்பெரிய ஆளுமைகள். இந்த இரண்டு படங்களின் அறிமுக விழாவுக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களான இயக்குநர் பேரரசு சார், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் ஆகியோருக்கு நன்றி. ’டிரம்ப் கார்டு’ திரைப்படத்தில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதன்மை கதாபாத்திரத்தில் பாண்டி நடித்திருக்கிறார். நிறை இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்கள், அந்த ஆசையால் பெரிய நடைமுறை சிக்கல்களை அனுபவிக்கிறார்கள். கோடி கோடியாக பணம் வைத்திருப்பவர்கள் கூட வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்டு, அதற்கான சரியான வழி தெரியாமல் தடுமாறுவதும், பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதையும் ‘டிரம்ப் கார்டு’ சொல்கிறது. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி நேர வேலை நேர்மையாக கொடுக்கப்படுகிறதா ?, அவர்களுக்கு ஊதியம் சரியாக கொடுக்கப்படுகிறதா ? என்பதையும், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ஒரு விழிப்புணர்வு படமாகவும் இந்த படம் இருக்கும். ‘பஞ்ச தந்திரம்’ உள்ளிட்ட பல பெரிய தமிழ்ப் படங்கள் மற்றும் இந்திய படங்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை வெளிநாட்டில் செய்து கொடுத்திருப்பவர் ராஜகோபால் சார். அவருக்கு தெரியாத பிரபலங்களே இல்லை. அடுத்தடுத்த நிகழ்வில், அந்த பிரபலங்கள் பங்கேற்பார்கள்.
’சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பூலோகம் ரவி, இயக்குநர் செந்தமிழனிடம் பணியாற்றியவர். ஷங்கர் சாரிடம் பணியாற்றிய செந்தமிழனிடம் பல வருடங்களாக பயணித்து பல அனுபவங்களை பெற்றிருக்கிறார். சசிகுமார் பாலா வெளிநாட்டில் இருந்து வந்து தயாரிக்கிறார். அவருக்கு சினிமா பற்றி சில சந்தேகங்கள், பயம் இருக்கிறது, அதை போக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. அவர்கள் ஒரு படத்தை தொடங்கும் போது அதை சரியான முறையில் முழுமையாக முடித்து திரைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே சில தவறான மனிதர்களால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. அந்த சூழலில் இருந்து அவரை மீட்டு அவர் நினைத்தது போல் படத்தை முடிக்க நாம் ஒத்துழைக்க வேண்டும். ஒரு படம் தயாரித்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும், அல்லது போட்ட முதலீட்டை திரும்ப பெற வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. தயாரிக்கும் படங்கள் சரியான முறையில் முடிவடைந்து திரைக்கு வந்தாலே போதும், என்று தான் நினைக்கிறார்கள். அது நடக்க நாம் ஒத்துழைக்க வேண்டும். இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய கூடிய பார்த்திபன், மூத்த கலைஞர், அசோக் குமாரிடம் பணியாற்றியவர். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு மூன்றாவதாக இவர்கள் தயாரிக்கும் படத்தை பார்த்திபன் இயக்குகிறார். அதற்கு ’தேங்காய் சீனிவாசன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி பட்மாக உருவாக உள்ளது. குறுகிய காலக்கட்டத்தில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த பி.ஆர்.ஓ கார்த்திக்குக்கு படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

