“ரெட் லேபில்” திரைப்படம் விமர்சனம்

லெனின் தயாரிப்பில் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஸ்காந்த், அனுமோகன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரெட் லேபில்”.  நாயகன் லெனின் கல்லூரி மாணவ பருவத்தில் 5 வழக்குகளில் சிக்கி பிறகு அதிலிருந்து விடுபட்டு சொந்தமாக தொழில் நடத்தி மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் படித்த கல்லூரியில் மாணவர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் அங்கு படித்து ரௌடிசம் செய்துவரும் எம்.எல்.ஏ. உதயகுமாரின் மகனும் போட்டிபோட மனுதாக்கல் செய்கிறார். ஆனால் இவன் மாணவர் தலைவனாக வர கல்லூரி நிர்வாகம் விரும்பவில்லை. ஆதலால் நன்றாக படித்து மற்ற மாணவ மாணவிகளுக்கு உதவி செய்யும் நல்ல குணமுடைய மாணவனை தேர்தலில் போட்டியிட  வைக்க நிவாகம் மறைமுகமாக உதவி செய்கிறது. அதற்கு துணையாக இருக்கும்படி தனது கல்லூரியின் முன்னாள் மாணவன் லெனினை அணுகுகிறார்கள். முதலில் மறுத்த லெனின் பிறகு சம்மதிக்கிறார். அதே நேரத்தில் எம்.எல்.ஏ.உதயகுமாரின் மகளை காதலிக்கிறார் லெனின். ஆனால் தன் மகளுக்கு வேறொரு அரசியல்வாதி தலைவரின் மகனுக்கு திருமணம் முடிக்க நிச்சயதார்த்தை நடத்தி வைக்கிறார் ஆர்.வி. உதயகுமார். ஒரு சந்தர்ப்பத்தில் தனது காதலிக்கு திருமண நிச்சயம் செய்துவைத்திருந்தவரை லெனின் கொலை செய்துவிடுகிறார். இந்த கொலையிலிருந்து லெனின் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் கதை.

இப்படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடித்திருப்பது படத்திற்கு இயல்பான தன்மையை வழங்குகிறது. அனுபவம் குறைந்த நடிகர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, லெனின் தனது முதல் படமாக இருந்தாலும், அனுபவம் மிக்க நடிகரைப் போல தன்னம்பிக்கையுடன் நடித்திருப்பது கவனிக்கத்தக்கது. இசையமைப்பாளர் கைலாஸ் மேனன், கதையின் உணர்ச்சி ஆழத்தை இசையின் மூலம் மேலும் வலுப்படுத்தியுள்ளார். கிராமப்புற வாழ்க்கை முறை மற்றும் கல்லூரி அரசியலின் மோதல்களை இணைத்து காட்டும் இந்த திரைப்படம், சமூக உண்மைகளை பிரதிபலிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், “ரெட் லேபல்” திரைப்படம் அரசியல், காதல் மற்றும் மனித உறவுகளை ஒருங்கிணைக்கும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் படைப்பாகத் தோன்றுகிறது. புதிய முகங்களின் நடிப்பு, உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் இயல்பான பின்னணி ஆகியவை இந்த படத்தை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கும் படைப்பாக மாற்றியுள்ளது.

பிரபலமான இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இப்படதின் மூலம் முழுநேர வில்லனாக நடித்துள்ளார். வில்லத்தனத்தின் உச்சத்தை, ஒரு அரசியல்வாதி எப்படி கையாளுவார் என்பதை தன் உதட்டின் அசைவாலேயே நடித்துக் காட்டியிருக்கிறார் ஆர்.வி.உதயகுமார். முனிஸ்காந்தும் அனுமோகனும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். யாரும் எதிர்பாராத முடிவை உச்சக்கட்ட காட்சியில் காட்டியிருக்கும் இயக்குநர் கே.ஆர்.வினோத் பாராட்டை பெறுகிறார். படத்தின் முன்பகுதியைவிட பின்பகுதி விறுவிறுப்புடனும் அடுத்த காட்சியை ஆவலுடன் எதிர்பார்க்கும் வகையில் திரைக்கதை செல்கிறது. பிணத்தை நடக்கவைக்கும் அறிவியல் நுட்பத்தை கையாண்டு இருப்பது பார்வையாளர்களை பரவசமடைய செய்திருக்கிறது.  ஆழமான சிந்தனையுடன் மாணவப்பருவத்தை அழகு படுத்திருக்கிறார்கள் கதாசிரியரும் இயக்குநரும். வாழ்த்துக்கள்.