துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படப்பிடிப்பு தளத்தில் மம்மூட்டி

துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்துக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், ஆக்ஷன் கோரியோகிராஃபர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.  படப்பிடிப்பு தளத்தில் இருந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.******

‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்தை, துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் Wayfarer Films  சார்பில்  பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன், ஷஹபாஸ் ரசீத் ஆகியோர் எழுதுகின்றனர்.

*தொழில் நுட்ப குழு விவரம்* லைன் புரடியூசர் – பிபின் பெரும்பில்லி ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித்  இசை – ஜேக்ஸ் பெஜாய் படத்தொகுப்பு – சமன் சாக்கோ தயாரிப்பு வடிவமைப்பாளர் – அஜயன் சல்லிசேரி  ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர் ஆடை – மாஷர் ஹம்சா புரொடக்ஷன் கன்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன் இணை இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர், பாடல் வரிகள் – மனு மஞ்சித் , விநாயக் சசிகுமார் VFX –  . தௌஃபீக் (எக்வொயிட்) (Taufeeq – Eggwhite)   போஸ்டர் டிசைன் – டென் பாயிண்ட் சவுண்ட் டிசைன் – சிங்க் சினிமா  சவுண்ட் மிக்ஸிங் – கண்ணன் கணபத் ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே மார்க்கெட்டிங் ஹெட் – விஜித் விஸ்வநாதன் மக்கள் தொடர்பு – யுவராஜ்