“இரவின் விழிகள்” திரைப்பட விமர்சனம்

மகேந்திரன் தயாரிப்பில் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் மகேந்திரா, நீமா ராய், நிழல்கள் ரவி, சிக்கல் ராஜேஷ், சிசர் மனோகர், சரண்ராஜ், அன்சி சைந்து, அஷ்மிதாாகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “இரவின் விழிகள்”. சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கிடப்பவர்களை தன் நண்பர்களுடன் சேர்ந்து கைப்பேசியில் காணொளி காட்சியாக பதிவு செய்து தனது வலையொளி இணையளத்தில் நேரடிப் பதிவேற்றம் செய்கிறார் நீமா ராய். இதனால் அவரின் வலயொளியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமன பார்வையாளர்கள் இருக்கிறஶ்ரீகள். விபத்தில் சிக்கியவர்கள் மட்டுமல்லாமல் ஊரைவிட்டு ஓடிவந்த காதலர்களின் காணொளி மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களில் நடக்கும் சில்மிஷ காட்சிகளை நேரடியாக பதிவேற்றம் செய்து பணம் சம்பதிக்கிறார் நீமா ராய். இதுவொரு பக்கம் நடந்துகொண்டிருக்க மறுபக்கம் நடு இரவு நேரத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில்  சிலபேர்களை கொடூரமாக வெட்டி அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்கிறான் ஒரு முகமூடி அணிந்த ஒருவன். அவன் யார்? எதற்காக கொலை செய்கிறான்? கொலை செய்யும் காரணம் என்ன? என்பதுதான் கதை.  கைப்பேசி வைத்திருப்பவர்கள்  பலபேர் நன்மைகளை செய்ய  கல்வி புகட்ட வலையொளியை பயன்படுத்திவருன் நிலையில் சில்பேர் ஆபாசங்களையும் சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் காணொளிகளை பதிவேற்ற வலையொளி தளத்தை உருவாக்கி அதன்மூலம் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டுப்பற்றும் சமுதாயத்தை சீர்திருத்தும் நோக்கமும் கிடையாது. அப்படிப்பட்டவர்களை மிருகத்திற்குக்கூட ஒப்பிடமுடியாது. மிருகம் தனது பசிக்கும் இனப்பெருக்கத்துக்கு மட்டுமே செயல்படும். ஆனால் இவர்கள் மனித உருவிலிருக்கும் சைத்தான்கள். அவர்களை அழித்தொழிக்க என்ன செய்ய வேண்டுமென்பதை திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநரும் கதாநாயகனுமான சிக்கல் ராஜேஷ் தங்கைமீது கொண்ட பாசத்தையும் இறப்பின்போது வெளிக்காட்டிய துக்கத்தையும் தத்ரூபமாக காட்டி அசைத்திருக்கிறார். அவரின் நடிப்பை நடிப்பு என்றே சொல்ல முடியாதளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது பார்வையாளர்களின் கண்களை ஈரமாக்கியது. (சபாஷ் சிக்கல் ராஜேஷ்). வலையொளி காட்சிகளை படமாக்கும் நேர்த்தியான நடிப்பை காட்டிய மகேந்திராவின் உடல் மொழியும் நீமா ராயின் கவர்ச்சியும் ரசிகர்களை ஈர்த்தன. வலையொளி காட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் நிழல்கள் ரவி.  ஒளிப்பதிவாளர் பாஸ்கர் தன் முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார். கதைக்கேற்ற இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.எம். அசர். உச்சக்கட்ட காட்சியில் சொல்கின்ற கருத்துகள் சட்டத்தின் தீர்ப்பாக இல்லாமல் தர்மத்தின் தீர்ப்பாக இருக்கிறது. துணிச்சல் மிகுந்த இயக்குநர் சிக்கல் ராஷேஷ் போற்றதலுக்குறியவர்.