விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன், குஷி ரவி, கௌசல்யா, ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி, ஆர்.எஸ்.சதீஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மனிதன் தெய்வமாகலாம்” 1980, 90 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்திலுள்ள ஒரு மலையடிவார கிராமத்தில் நடக்கும் கதையாக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியிருக்கிறார். அந்த கிராமத்தில் 140 குடும்பங்களே வாழ்கிறார்கள். அதனால் அரசாங்கத்தின் பார்வை, ஓட்டு வாங்க மட்டுமே விழந்ததே தவிர, எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. ஆனால் அக்கிராமத்தில் சில பெண்கள் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். சில பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். அது ஏன்? என்பதுதான் கதை. இது துப்பறியும் படமல்ல. “டாம் டீம்” என்ற கூச்சலில்லாத ஒரு திரைக்காவியம். செல்வராகவன் அந்த மலையடி கிராமத்தில் பதனீர் வியாபாரம் செய்கிற ஒரு விவசாயி. பக்கத்து ஊரில் நடுத்தர குடும்பத்தில் அண்ணனின் பராமரிப்பில் வாழந்துவரும் குஷி, செல்வராகவனை திருமணம் செய்து கொள்கிறார். மேல் வருனானத்துக்காக செல்வராகவன் ஒரு உணவகத்தை குஷி, கௌசல்யா ஆகியோரின் ஆலோசணையின்படி நடத்தி, நல்ல வருமானத்த்குடன் வாழ்கிறார். ஒருநாள் திடீரென அமுதா என்ற குழந்தை பிணமாக சாலையோரத்தில் கிடக்கிறது. இதைப்பார்த்த செல்வராகவன் மனம் உடைந்து போகிறார். பிறகு ஓரிரு வாரங்கள் கழித்து கர்ப்பிணியாக இருக்கும் செல்வராகவனின் மனைவி குஷி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். இதற்கெல்லாம் யார் காரணம் என்று செல்வராகவனுக்கு தெரியவருகிறது. தெரிந்ததும் செல்வராகவன் செய்ததை, தெய்வத்தின் செயலுக்கு ஒப்பிட்டு கதையை முடிக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத். (பாவிகளை தண்டிப்பதில் இறைவன் மிகக் கடுமையானவன்). செல்வராகவன் இப்படத்தில் நடிக்கவில்லை. தனது எதர்த்தமான உடல் மொழியால் கதாபாத்திரத்துக்குள் கரைந்து போய்விட்டார். உச்சக்கட்ட காட்சிக்கு முந்தைய காட்சியில் மனைவி இறந்த துக்கத்தை தாங்கமுடியாமல் தரையில் உருண்டு புரண்டு அழும் காட்சியில் பார்வையாளர்களின் கண்கள் ஈரப்பதமாகிறது. குடும்பத்தலைவிக்கேற்ற குத்துவிளக்காக திரையில் தென்படுகிறார் குஷி, நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றும் கௌசல்யாவுக்கு அரிதாரப் பூச்சு முகத்தில் அறவே இல்லாமல் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். துணை நடிகர்கள் அனைவரும் வாங்கிய சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். ரவிவர்மா குமாரின் ஒளிப்பதிவு, மலையடிவார கிராமத்துக்குள் படம் பார்ப்பவர்களுக்கும் நடமாடும் உணர்வை ஊட்டுகிறது. நேர்மையான எம்.எல்.ஏவாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு அளித்த வாய்ப்பு மிகமிக குறைவு. குணச்சித்திர நடிகராக இதுவரை பார்த்த மைம்கோபியை, இப்படத்தில் வில்லத்தனத்தில் மிஞ்சிய நடிகராக பார்க்கலாம். மொத்தத்தில் மனிதனின் எதார்த்த வாழ்வியலை ஆரவாரமில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத். ஏ.ஆர்.ப்ரியனின் இசையும் பிரியமானதாகத்தான் இருக்கிறது.
“மனிதன் தெய்வமாகலாம்” திரைப்பட விமர்சனம்
