“கம்பி கட்ன கதை” திரைப்படம் தீபாாஅளியன்று திரைக்கு வருகிறது என படக்குழுவினர் தெரிவித்தார்கள். முன்னதாக இப்படத்த்கின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. இந்நிகழ்விக் கலந்து கொண்டு தயாரிப்பாளர் ரவி அவர்கள் பேசியது: “இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு. ஒரு நகைச்சுவை சாமியாரை மையமாகக் கொண்டு கதை உருவாக்கியிருந்தோம். நட்டி சார் இப்படத்திற்கு ஒப்புதல் அளித்ததும், நாங்கள் எழுதிய கதையே முழுமையாக மாறிவிட்டது. எல்லாருடைய வாழ்க்கையும் இப்படத்தில் மாறுபட்ட வகையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த படம் எனது நண்பர்களுக்காக ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இவர்கள் அனைவருமே அவர்களது துறைகளில் சிறந்தவர்கள். இந்த படம் மங்காத்தா பிக்சர்ஸ் தளத்தில் மிகவும் வலிமையாக உருவாகியுள்ளது. அனைவரும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளனர்.******
இது ஒரு லாஜிக் இல்லாத கதை அல்ல – பகுதி 2 எடுக்கப்படும் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. எல்லோரும் இதைப் பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். 15 நாட்களில் படம் வெளியாகும். அனைவருக்கும் என் நன்றிகள். இங்கு வந்த அனைவருக்கும் வணக்கம். இங்கு இருக்கிற ஒவ்வொருவரும் என் நண்பர்கள்தான். இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. நாங்கள் இந்த கதையை உருவாக்கியதில் பெருமை கொள்கிறேன். இது ஒரு நல்ல முயற்சி. எல்லோரும் உறுதியாக இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும். நன்றி!
கதாநாயகன் நட்டி அவர்கள் பேசியது: அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் ஐயாவிற்கு நன்றி. தயாரிப்பு நிறுவனம் மங்காத்தா மூவீஸ் – இவர்களுக்கு நன்றி. முதலாம் படம் எடுக்கிறதுன்னால, பட்ஜெட் குறைக்க முயற்சி பண்ணுவாங்க. ஆனா எதுவும் குறையாம பண்றவங்க – அவருதான் இந்த தயாரிப்பாளர். ஒரு சாதாரண விஷயம் தான், கதை இங்கே இருந்தது – ஆனா ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் படம் உருவானது. ஆர்ட் டைரக்டர் சிவா, கேமராமேன் ஜெய் அவர்களுக்கு நன்றி. இந்த படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. முருகானந்தம் சார், சிங்கம் புலி, தயாரிப்பாளர், இயக்குனர் கொடுத்த ஆதரவுதான் இந்த படத்தை வெற்றியாக்கியிருக்கு. ஸ்ரீரஞ்சினி, ஷாலினி – நீங்கள் இருவரும் அருமையாக நடித்தீர்கள். வாழ்த்துகள்! முத்துராமன் சார், மகேஷ் சார், சாம்ஸ் சார், கோதண்டம் சார் – அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் ஸ்கிரிப்ட் என்ன வேண்டும் என்றதோ அதைத்தான் நாங்கள் செய்தோம். அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நன்றி. மாஸ் ஆடியோ அவர்களுக்கும், உத்தரா புரொடக்ஷன்ஸ் அவர்களுக்கும் நன்றி. பத்திரிகையாளர், ஊடக நண்பர்களுக்கும் நன்றி. இந்த படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகிறது – கண்டிப்பா வந்து பாருங்க. நன்றி. குறிப்பாக இசையமைப்பாளர் சதீஷ் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.