அனைவருக்கும் இறைவன் ஒருவனே” மதநல்லிணக்க மாநாட்டில் பால் உப்பாஸ் – லியோ பால்

“ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் 56வது கல்கி ஜெயந்தி விழாவின் ஒரு ப்குதியாக சர்வசமய மதநல்லிணக்க மாநாடு நடந்தது. மாநாட்டில் மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைமை நிவாகிகள் பால் உப்பாஸ் என்.லாறி, லியோ பால் சி.லாறி ஆகியோர் உரையாற்றினார்கள். பால் உப்பாஸ் கூறியதாவது: “இந்த சர்வ சமய மாநாட்டினை மனுஜோதி ஆசிரமத்தில் எல்லா மதத்தினரையும் அழைத்து நடத்த ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்கள் ஆரம்பித்தார்கள். இதைத் தொடர்ந்து என்னுடைய தந்தை திரு. தேவ ஆசீர் லாறி அவர்களும், அவருடைய குடும்பத்தினராகிய நாங்களும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் தொடர்ந்து நடத்தி வருகின்றோம். இந்த விழாவின் மூலமாக கடவுள் ஒருவரே, மக்கள் அனைவரும் அந்த ஒரே இறைவனின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து மத உணர்வுகளை களைந்து, மதமற்ற மனிதர்களாக அந்த ஒரே இறைவனைப் பின்பற்ற வேண்டும். அவரையே வணங்க வேண்டும் என்ற ஸ்ரீ லஹரி கிருஷ்ணாணாவின் உயரிய எண்ணத்தை வெளிப்படுத்துகின்றோம். இங்கு நடத்தப்படும் விழாவில் இந்து வேதங்கள், திருக் குர் ஆன், பைபிள் மற்றும் அனைத்து வேதங்களில் இருந்து சொற்பொழிவாற்றலாம் என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே கூறி இருக்கின்றார். இறைவனால் மனிதர்களாகப்பட்ட நாம் இந்த உலகத்தில் நமக்காக எதைத் தேட வேண்டும் என்ற ஆன்மீக சிந்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனல் நாம் இந்த உலகத்தின் கஷ்டங்களில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறோம். எனவே கடவுளை நாம் முதன்மையானவராக தேர்ந்தெடுத்தால் உலக கஷ்டங்களில் இருந்து இலகுவாக நம்மைப் படைத்த இறைவனை அடையலாம்”. என்றார்.

லியோ பேசும்போது கூறியதாவது:”இன்றைக்கு நாம் கலியுகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இந்த கலியுகத்தைக் குறித்து பார்த்தோம் என்றால், கலியுகத்தின் அடையாளம் எதுவாக இருக்கிறது? பக்தி என்பது குறைந்து போய், கடவுளுடைய நம்பிக்கை என்பது குறைந்து போகக்கூடிய ஒரு காலமாக இந்த கலியுகம் இருக்கிறது என்பதை நமக்கு வேதங்களின் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படி மனிதர்களுக்கு பக்தி குறையும் பொழுது கடவுள் பத்தாவது அவதாரமாக கல்கி மகா அவதாரமாக இந்த பூமியில் இறங்கி வருகிறார் என்பதை நாமெல்லோரும் தெரிந்து கொண்ட காரியமாக இருக்கிறது. இந்த கலியுகத்தில் நாம் எங்கே பார்த்தாலும் தர்மம் என்பது குறைந்து போய் அதர்மம் என்பது பெருகிக் கொண்டே போகிறதை நாம் காணமுடிகிறது. ஆகவே அப்படிப்பட்ட ஒரு காலத்தில் நாம் இப்பொழுது இருக்கும்பொழுது, இன்றைக்கு நாம் கடவுளுடைய நம்பிக்கையுடன் நாம் இங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லும்பொழுது, கடவுள் அவருடைய பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக இந்த புண்ணிய பூமியில் அவர் இறங்கி வருகிறார். “நம்முடைய வாழ்க்கையில் நாம் வெற்றியைக் காண வேண்டும் என்றால் கடவுளைக் குறித்த பக்தி, பயம் என்பது ஒரு முக்கியமான காரியமாக இருக்கிறது”. என்றார்.