நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அமைந்த மனுஜோதி ஆசிரமத்தில் கடவுள் ஒருவரே என்ற ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கொள்கையை உலகிற்கு பரப்பி வருகின்றனர். 1969 ஆம் வருடம் ஜுலை 21-ம் நாள் மனிதன் சந்திரனில் முதன் முதலில் கால்வைத்த போது, அமெரிக்காவில் சிக்காகோ பட்டணத்தில் பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா தம்முடைய பக்தர்களுக்கு தனது விஷ்வ ரூபத்தை காண்பித்து தன்னை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வினை நினைவு கூர்ந்து 55 ஆண்டுகளாக கல்கி ஜெயந்தி விழாவாகவும், கூடாரப் பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்ற இவ்விழாவில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் மலேசியா அமெரிக்கா, பர்மா ஆகிய நாடுகளில் உள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் அனைவரும் சாதி, மத, இன, நிறம், மொழி பேதமின்றி இங்கே ஒன்று கூடி கல்கி ஜெயந்தி விழாவினை சிறப்பாக கொண்டாடினார்கள். இவ்விழாவில் ஆன்மீக சொற்பொழிவுகள், தேசீய ஒறுமைப்பாடு கூட்டம் மற்றும் சர்வ சமய மாநாடு, புத்தக வெளியீடு, பெண்கள் மாநாடு, மண்டலமாக உணவு சமைத்தல், கல்கி ஜெயந்தி தினம், சிறுவர் சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள் மேலும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவினை தேவாசீர் லாறியின் குமாரர்களான பால் உப்பாஸ் என். லாறி, லியோ பால் சி. லாறி மற்றும் ஆசிரம நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 20-ம் தேதி தேசீய ஒருமைப்பாடு கூட்டம் மற்றும் சர்வ சமய மாநாடு நடைபெற்றது. இவ் விழாவில் ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் துதிப்பாடலின் 2 ஆம் பாகம் வெளியிடப்பட்டது. மதுரை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். சென்னை அகில இந்திய தமிழ் சங்கத்தின் தலைவர் ஆவடி குமார் மற்றும் மதுரை, அகில இந்திய வானொலியின் மேனாள் நிர்வாக இயக்குனர் மகா சோமாஸ் கந்தமூர்த்தி, ராம பூதத்தான், பேச்சாளர்கள், அரசாங்க அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
மனுஜோதி ஆசிரமத்தில் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் 56-வது கல்கி ஜெயந்தி விழா
