“இன்றைக்கு இந்த விழாவினை சிறப்பித்துகொடுப்பதற்காக அநேக பெரியவர்கள் இங்கே வந்து இந்த மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். நம்முடைய அழைப்பிற்கிணங்கி இங்கே வந்து இந்த விழாவினை சிறப்பித்து கொண்டிருக்ககூடிய எல்லா பெரியவர்களுக்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் என்னுடைய வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு நாம் கலியுகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இந்த கலியுகத்தைக் குறித்துபார்த்தோம் என்றால், கலியுகத்தின் அடையாளம் எதுவாக இருக்கிறது? பக்தி என்பது குறைந்து போய், கடவுளுடைய நம்பிக்கை என்பது குறைந்து போகக்கூடிய ஒரு காலமாக இந்த கலியுகம் இருக்கிறது என்பதை நமக்கு வேதங்களின் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படி மனிதர்களுக்கு பக்தி குறையும் பொழுது கடவுள் பத்தாவது அவதாரமாக கல்கி மகா அவதாரமாக இந்த பூமியில் இறங்கி வருகிறார் என்பதை நாமெல்லோரும் தெரிந்து கொண்ட காரியமாக இருக்கிறது.
இந்த கலியுகத்தில் நாம் எங்கே பார்த்தாலும் தர்மம் என்பது குறைந்து போய் அதர்மம் என்பது பெருகிக் கொண்டே போகிறதை நாம் காணமுடிகிறது. ஆகவே அப்படிப்பட்ட ஒரு காலத்தில் நாம் இப்பொழுது இருக்கும்பொழுது, இன்றைக்கு நாம் கடவுளுடைய நம்பிக்கையுடன் நாம் இங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லும்பொழுது, கடவுள் அவருடைய பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக இந்த இந்தியாவில் இந்த புண்ணிய பூமியில் அவர் இறங்கி வருகிறார். ஆகவே புராணங்களின்படி பார்க்கும்போது இந்தியா ‘புண்ணிய பூமி’ என்றழைக்கப்படுகிறது. அதற்கு காரணம் என்னவென்றால் இந்தியாவில் தான் கடவுளுடைய நம்பிக்கை என்பது அதிகமாக இருக்கிறது என்பதை நாம் காண முடிகிறது. அந்த காலத்தில் வாழ்ந்த இந்தியாவின் ராஜாக்களை நாம் கவனித்துப் பார்த்தோம் என்றால் அவர்கள் அநேக யுத்தங்களை மேற்கொண்டார்கள். எதனால் அவர்களால் வெற்றி கொள்ள முடிந்தது என்பதை குறித்து நாம் இன்றைக்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு கடவுளின் மேல் ஒரு பக்தி மற்றும் நம்பிக்கை இருந்ததினால், அவர்களால் என்ன செய்ய முடிந்தது எல்லா எதிரிகளையும் அவர்களால் வென்று கொண்டு வர முடிந்தது. ஆகவே இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் நாம் வெற்றியைக் காண வேண்டும் என்றால் கடவுளைக் குறித்த பக்தி, பயம் என்பது ஒரு முக்கியமான காரியமாக இருக்கிறது. நாம் நம்முடைய வரலாறை திருப்பி பார்ப்போம் என்றால், அநேக ராஜாக்கள் அங்கே கடவுள் மேல்நம்பிக்கை வைத்து தங்களுடைய யுத்தங்களில் அவர்கள் வெற்றிப் பெற்றதை நாம் காண முடிகிறது.
இன்றைக்கு நாம் கஜினி முகம்மதை குறித்து நாம் பார்க்கிறோம். படிக்கும்போது நாம் என்ன படிக்கிறோம் கஜினி முகம்மது பதினெழு முறை படையெடுத்தான் என்று நாம் படிக்கிறோம் ஆனால. பதினெழு முறை கடவுள் மேல் நம்பிக்கை கொண்ட ராஜாக்கள் கஜினி முகம்மதை ஓட ஓட விரட்டினார்கள் என்றுநாம் மறந்து விடுகிறோம். ஜெயயபாலன், பிருத்விராஜ்சவுகான் போன்ற ராஜாக்கள் கடவுள் பக்தி உடைய மக்களாக இருந்து, இந்தியாவை அவர்கள் பாதுகாத்து கொண்டிருந்தார்கள் என்ற வரலாறை பார்க்கும்போது நாம் காண முடிகிறது. ஆகவே இந்த வரலாறை யார் மாற்றிவிடுகிறார்கள்? கடவுளுடைய மகிமை தெரிந்துவிடக்கூடாது என்பற்காக இந்த கலியுகத்தில் வரலாறை கலியன் மறைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறான். ஆகவே கலியனுடைய வேலை என்னவாக இருக்கிறது? மக்களை பிரித்து அரசாட்சி செய்வது தான் அவனுடைய வேலையாக இருக்கிறது. ஆகவே மக்கள் கடவுளை பின்பற்றுவார்கள் என்றால் அவர்களுக்குள் இருக்கும் ஜாதி, மத, இன, மொழி, வேறுபாடு போய் விடும் என்ற காரணத்திற்காக, அவன் என்ன செய்ய முயற்சி செய்கிறான்? வரலாறை மாற்றுகிறான். கடவுளைக் குறித்து மறைத்து விடுகிறான். அப்பொழுது மக்கள் அங்கே சண்டையிட்டுக் கொள்ளும் பொழுதுஅவர்களை அவன் ஆட்சி செய்வதற்கு அவனுக்கு வசதியாக இருக்கிறது. அதைத்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் செய்த ஒரு காரியமாக நாம் பார்க்கிறோம். (Divide and Rule Policy) ‘பிரித்து ஆள்வது’ என்பதை கலியன் செய்வதை நாம் இன்றைக்கு காண முடிகிறது. ஆனால் தீர்க்கரிசனங்களின்படி பார்க்கும்போது, கலியுகத்தில் நாராயணர் பூமியில் இறங்கி வந்து, ஒரே குடையின் கீழ்ஆட்சி செய்வார் என்று தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 300 வருடங்களுக்கு முன்பாகவந்த முத்துக்குட்டி சுவாமி அதைக் குறித்துச் சொல்லியிருக்கிறார். நாராயணர் ஒரே குடையின் கீழ் அங்கே ஆட்சி செய்வார் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதைத்தான் இன்றைக்கு நம்முடைய ஆசிரமத்தில் நாம்செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே நாம் செய்யகூடிய இந்த காரியம் என்பது கலியனை பலவீனபடுத்தக்கூடிய ஒருகாரியமாக இருக்கிறது.
ஆகவே இன்றைக்கு வேதாகமத்தில் நாம் பார்த்தோம் என்றால் விசுவாசம் என்ற ஒரு காரியம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இன்றைக்கு விசுவாசம் என்று சொன்னவுடன், அது கிறிஸ்தவ வார்த்தை என்று அந்த வார்த்தையை நாம் புறக்கணித்து விடுகிறோம். ஆகவே மொழிப்பெயர்ப்புகளில் அநேக வித்தியாசமான பாஷைகள் வருகிறது. விசுவாசம் என்றால் நம்பிக்கை என்று அர்த்தம். கடவுள் மேல் வைத்திருக்கிற நம்பிக்கை தான் நமக்கு வெற்றியைக் கொடுக்கிறது என்பது தான் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே வேதாகமத்திலும், பகவத்கீதையிலும், புராணங்களிலும் வேற வேறகாரியத்தைக் குறித்து அங்கே சொல்லப்படவில்லை. இன்றைக்கு பகவத்கீதையில் நாம் பார்த்தோம் என்றால் மகாபாராதத்திற்கு முன்பாக அங்கே சங்கானது முழங்கப்பட்டது. அப்பொழுது ஒரு யுத்தத்தில் ஜெயிப்பதற்கு முன்பாக அங்கே சங்கானது ஊதப்படுகிறது. அதே சங்கை குறித்து வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வேதாகமத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? கடைசி எக்காளம் தொனிக்கும் போது கடவுள் இறங்கி வருவார். அங்கே மொழிபெயர்ப்பில் எக்காளம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை பகவத்கீதையிலும், புராணங்களிலும் பார்த்தோம் என்றால் அது சங்கு என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு கூட போலீஸ் பரேடாக இருக்கட்டும், மில்ட்ரி பரேடாக இருக்கட்டும் அங்கே அவர்கள் என்ன ஊதுகிறார்கள்? பியூகல் ஊதுகிறார்கள். அந்த காலத்தில் பியூகல் கிடையாது. அது அதற்கு பிறகு கண்டுபிடித்த ஒரு வாத்தியம். அப்பொழுது ஆதி காலத்தில் அவர்கள் சங்கை அந்த பியூகலாக அந்த சத்தத்தை போல் அவர்கள் அங்கே முழங்குகிறார்கள். ஆகவே சங்கின் சத்தம் என்பது வெற்றியின் ஒரு அடையாளமாக இருக்கிறது. அதேபோல் கடவுளுடைய தொனி என்பது எப்படியிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெண்கல தொனி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை நினைவுகூறும் பொருட்டாகதான் நாம் அந்த சங்கின் சத்தத்தை ஒலிக்கச் செய்கிறோம்.
ஓம் என்ற சத்தம் என்பது சங்கினுடைய முழக்கத்தைப்போல இருக்கிறது. அதனால்தான் அந்த எக்காளம் என்பதையும் வேதாகமத்தில் மறுபடியும் மறுபடியுமாக அநேக இடங்களில. சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் என்ன செய்துவிட்டோம் அந்த மொழிப் பெயர்ப்பை சரியாக புரிந்துகொள்ளாமல் சங்கு என்பது வேறு எக்காளம் என்பது வேறு என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆகவே தண்ணீர் என்ற ஒரு காரியம் இருக்கும்போது தெலுங்கில் அதை நாம்நீலு என்று அழைக்கிறோம். தமிழில் அதை நாம் தண்ணீர் என்று அழைக்கிறோம். ஆனால் அந்த பொருள் என்பது ஒரே பொருளாகத்தான் இருக்கிறது. அதே போல் கடவுளை நாம் அநேக பெயர்களைக் கொண்டு அழைத்தாலும் அநேக வேதங்கள், அநேக புராணங்கள், வேதாகமம் நமக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் நம்பிக்கை என்று சொன்னாலும் விசுவாசம் என்றhலும் அது கடவுளைக் குறித்த பயமும் கடவுளைக் குறித்த பக்தியையும் தான் அது குறிப்பிடுகிறது என்பதை நாம் இன்றைக்கு புரிந்துக்கொள்ள வேண்டும். இன்றைக்கு வேதாகமத்தில் இயேசு என்ன சொல்லுகிறார். நீங்கள் விசுவாசத்துடன் ஒரு மலையைப் பார்த்து அது நகர வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் அந்த மலையானது அசைந்து உங்களுக்கு வழிகொடுக்க வேண்டும் என்று அவர் சொல்லுகிறார். ஆனால் முழு வேதாகமத்தையும் நீங்கள் வாசித்துப் பார்த்தீர்கள் என்றால் அந்த வேதாகமத்தில் எங்கேயுமே மலை அசைந்து இடங்கொடுத்ததை அப்படிப்பட்ட நிகழ்வை அந்த வேதாகமத்தில் நாம் பார்க்க முடியாது.
ஆனால் புராணங்களில் பார்த்தீர்கள் என்றால் அகஸ்தியர் திருநெல்வேலிக்கு வரும்போது அவர் எந்த மலையைப் பார்த்து அவர் அங்கே சொல்லுகிறார்? இந்த மேற்கு தொடர்ச்சி மலை இருக்கிறதல்லவா அந்த மேற்குதொடர்ச்சி மலைகளைப் பார்த்து நான் திருநெல்வேலிக்கு தாமிரபரணி கரைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லும் பொழுது, அந்த மலையானது அங்கே விலகி அவருக்கு இடங்கொடுத்ததை நாம் காண முடிகிறது. அது உண்மையில் நடந்த காரியமாக இருக்கிறது. இன்றைக்கு அநேகருக்கு என்ன தெரியாது யாது? தாமிரபரணி எங்கேயிருந்து ஆரம்பிக்கிறது என்பது தெரியாது. ‘அகஸ்தியர் அருவி’ என்று இங்கேயிருந்து ஒரு நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அகஸ்தியர் அருவியில. இருந்துதான் தாமிரபரணியானது துவங்குகிறது. அந்த நீர்வீழ்ச்சிக்கு மேலே நீங்கள் செல்வீர்கள் என்றால. அகஸ்தியர் உட்கார்ந்து கடவுளைக் குறித்து தியானம் பண்ணிய இடத்தில் ஒரு கோவிலும் இன்றைக்கு இருக்கிறது. அப்பொழுது விசுவாசத்தைக் குறித்து இயேசுசொன்னதை அகஸ்தியர் செய்து காட்டியிருக்கிறார். அப்பொழுது நீங்கள் வேதாகமத்தையும் வாசித்து புராணங்களையும் வாசித்தால் தான் நீங்கள் இந்த காரியத்தை புரிந்துகொள்ள முடியுமே தவிர, இல்லையென்றால் கடவுளைக் குறித்து முழு காரியத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது. அந்த கலி என்பவன் அவ்விதமாக பிரித்து வைத்திருக்கிறான். ஆகவே இந்த கலியுகத்தில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் நமக்கு எல்லா வேதங்களிலும் இருந்தும் எல்லா காரியத்தில் இருந்தும் நம்மை எடுத்து எல்லா காரியத்தையும் நமக்கு கோர்த்து அதை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது?
கடவுள் மேல் பரிபூரண நம்பிக்கை அந்த விசுவாசத்தை உடையவர்களாக பக்த ப்ரகலாதனைப் போல பக்த ப்ரகலாதனின் நம்பிக்கை என்ன?அவனுடைய விசுவாசம் என்ன? ‘கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்ற விசுவாசத்துடன் எனக்கு வெற்றியைக் கொடுப்பார் என்று யாரிடம் அவன் யாரிடம் சவால் விடுகிறான்? தன்னுடைய தந்தையிடம் அவன் சவால் விடுகிறான். அந்த விசுவாசம் தான் அந்த நம்பிக்கைதான் அவனைக் காப்பாற்றியது. அப்படிப்பட்ட ஒருநம்பிக்கையுடன் இன்றைக்கு நாம் கடவுளைத் தேடவேண்டும் கடவுளை நாம் தொழுத. கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட விசுவாசத்தை நாம் பெற்றுக் கொள்வதற்கு சில நேரங்களில் இசை என்பது நமக்கு உதவியாக இருக்கிறது. ஒருவர் பேசும்பொழுது அது சில நேரங்களில் நம்முடைய மனதில் பதிகிறதில்லை. அதே விஷயத்தை ஒருபாடலாகவோ அல்லது ஒரு நாடகமாகவோ அல்லது ஒரு படமாகவோ பார்க்கும்போது அது பிள்ளைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அது அவர்களுடைய மனதில் பதிகிறது. அதனால் நாம் என்னசெய்ய வேண்டியிருக்கிறது? அதை பாடல்களாகவும, சில வீடியோக்களாகவும் நாம் அதை கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. எப்படி சிறு பிள்ளைகளுக்கு நாம. மருந்தை கொடுக்க வேண்டும் என்றால் ஒன்று தேனில் தடவிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் மருந்து என்றாலே அது கசப்பாக இருக்கும். ஏனென்றால் நம்முடைய டாக்டர. உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் கொடுக்கிற மருந்து எல்லாம் கசப்பாகத்தான் இருக்கும்.
ஆனால் அதை எடுத்துக் கொள்ளும்போது விசுவாசம் என்கிற நம்பிக்கையின்மை என்ற வியாதி போய் கடவுள் மேல் நம்பிக்கை அதாவது விசுவாசம் என்கிற ஆரோக்கியமான காரியம் நமக்குள் வருகிறது. அப்பொழுது அதை நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது அந்த மருந்தைக் கொடுக்க வேண்டும்என்றால் நம்பிக்கை, விசுவாசம் என்கிற மருந்தை கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு மேல் ‘இசை’ என்கிற தேனைத்தடவி கொடுக்க வேண்டியிருக்கிறது. அதைத்தான் இந்ததடவை நாம் செய்திருக்கிறோம். இந்த தடவை இந்த பாடல்கள் என்பது உங்களுக்கு சிடியிலோ அல்லது பென்ட்ரைவிலோ கிடையாது. எல்லாமே இணையதளம் என்ற ப்ளாட்பாமில் இன்றைக்கு ஒரே நாளில் இந். பாடல்களானது வெளியீடு செய்யப்படுகிறது. அதை சௌந்தர்ய லஹரி கிரியேமூன்ஸ், மனுஜோதி
இன்டர்நேஸ்னல் மூலம் பெருமையாக இன்றைக்கு உங்களுக்கு வழங்குகிறது. அதை நீங்கள் ஒவ்வொருவரும் கேட்டு, உங்களுடைய ஆவிக்குரிய ஷீவியத்திற்கு உங்களுடைய கடவுள் பக்திக்கான பாதையில் செல்லுவதற்கு நீங்கள் அதை பிரயோஜனமாக உபயோகப்படுத்திக் கொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். கடவுளைக் குறித்த நம்பிக்கையையும், அவருடைய விசுவாசத்தையும் இந்த உலகத்திற்கு எடுத்து செல்வதற்கு இசை நமக்கு உதவி செய்ய வந்திருக்ககூடியதாக இருக்கிறது. இந்த பெரியவர்களுக்கும் நான் மறுபடியுமாக வாழ்த்துதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு ஸ்ரீமந் நாராயணர்ஸ்ரீ லஹரி கிருஷ்ணா எல்லா வளமும் எல்லா ஆசீர்வாதமும்வழங்க வேண்டுமென்று கடவுளை நான் பிரார்திக்கிறேன். இப்பொழுது நீங்கள் எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா துதி பாடல்கள்வால்யும் – 18” தெலுங்கில் உள்ள அந்த வால்யும் இப்பொழுது வெளியீட இருக்கிறது. அதை சௌந்தர்யலஹரி கிரியேஷன்ஸ் , மனுஜோதி இன்டர்நேஷனல் உங்களுக்கு பெருமையுடன் வழங்குகிறது. ஓம் நமோபகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹ!