பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இதற்கு முன்பு வெளியான புதுமையான மற்றும் தரமான படங்கள் எல்லைகள், மொழிகள் தாண்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அனுஷ்கா ஷெட்டியின் ‘அருந்ததி’, கல்யாணி பிரியதர்ஷனின் ’லோகா: சாப்டர்1’ போன்ற படங்கள் இந்திய சினிமாவில் முத்திரை பதித்தவை. அந்த வரிசையில் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமாரின் ’மண்டவெட்டி’ திரைப்படம். இப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் நிறுவனத்தில், சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தயாரிக்கும் இந்த படம் காட்சியமைப்பிலும் கதை சொல்லலிலும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். ********
*தொழில்நுட்பக் குழு விவரம்:* பேனர்: டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ், தயாரிப்பு: சரண்ராஜ் செந்தில்குமார், இயக்கம்: சரண்ராஜ் செந்தில்குமார், ஒளிப்பதிவு: பிரகாஷ், படத்தொகுப்பு: குணா, இசை: தீபக் வேணுகோபால், சண்டை பயிற்சி: கவுதம், ஆடை வடிவமைப்பு: சங்கீதா, ஒப்பனை: நர்மதா, மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.

