கனடா மதிவாசனின் ‘ஆக்குவாய் காப்பாய்’ தமிழ்த் திரைப்படம் தற்போது சில இந்திய மொழிகளில் ‘மொழிமாற்றம்’ செய்யப்பெற்று வருகின்றது. 

கனடாவில் பன்முகக் கலையுலகப் பிரமுகராகவும் ரசிகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இசைக் கலைஞராகவும் நடிகராகவும் அத்துடன் கணணித்துறை விரிவுரையாளராகவும் நன்கு அறியப்பெற்ற மதிவாசன் அவர்கள் அண்மையில் தயாரித்து இயக்கிய ‘ஆக்குவாய் காப்பாய்’ என்னும் கனடியத் தமிழ்த் திரைப்படம் தற்போது சில இந்திய மொழிகளிலும் ‘மொழிமாற்றம்’ செய்யப் பெற்று வருகின்றது. விரைவில் தமிழகம் மற்றும் உலகத்தின் பல வெண்திரைகளிலும் காட்சியளிக்கப் போகின்றது.

மேற்படி ஆக்குவாய் காப்பாய்’ என்னும் கனடியத் தமிழ்த் திரைப்படத்தின் விசேட காட்சியொன்று அண்மையில் கனடா- ஸ்காபுறோ நகரில் வுட்சைட் சினிமாவில் திரையிடப்பெற்றபோது மதிவாசன் அவர்களைப் பாராட்டி ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் வழங்கிய பாராட்டுப் பத்திரத்தை திரைப்படக்காட்சி முடிவுற்ற பின்னர் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையின் தலைவருமான லோகன் லோகேந்திரலிங்கம் கலைஞர்கள் சூழ்ந்து நிற்க அவருக்கு வழங்குவதை இங்கு காணலாம்- தகவல் சத்தியன்