“அஷ்டகர்மா” திரைப்படம் பிப்ரவரி 11ல் வெளியாகிறது

மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா”.  ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.  கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர். விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். உலகமெங்கும் 2022 பிப்ரவரி 11 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.  இந்நிலையில் படக்குழுவினர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்   A.M.A.மாலிக் பிரபலங்கள் அனைவரையும் வரவேற்று பேசினார் இவ்விழாவினில் இசையமைப்பாளர் L.V.முத்து பேசியதாவது: இந்த வாய்ப்பு  தந்த கிஷன் அவர்களுக்கு நன்றி. எங்கள் இசையில் பாடிய டி ஆர் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் விஜய் அட்டகாசமான வகையில் புது விதமாக இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நீங்கள் நிறைய எதிர்பார்க்கலாம். இசையமைப்பாளர் L.V. கணேஷ் பேசியதாவது: எங்களுக்கு வாய்ப்பு தந்த கிஷன் அவர்களுக்கு நன்றி. எங்கள் பாடலை டி ஆர் சார் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அவரை அணுகியபோது அவரே இந்த பாடலையும் எழுதினார். அவர் திரை வாழ்வில் வெளிப்படத்திற்கு பாடல் எழுதுவது இதுவே முதல் முறை. அந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்துள்ளது. இயக்குநர் விஜய் மிக அட்டகாசமாக படத்தை எடுத்துள்ளார். படத்தை எல்லோரும் திரையரங்கில் பாருங்கள் நன்றி.

நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார் பேசியதாவது… இன்று எனக்கு மிகவும் சிறப்பான நாள். மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளார்கள், படத்தின் நாயகன் C.S.கிஷன் அற்புதமாக நடித்துள்ளார். இயக்குநர் விஜய் தமிழ் தமிழ்செல்வன் கதையும், திரையில் காட்சியை கொண்டு வருவதிலும் மிகப்பெரும் திறமைசாலி என நிரூபித்துள்ளார். எல்லோரும் நன்றாக வேலை பார்த்துள்ளார்கள். இந்தப்படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளேன் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு அழகான படம் தியேட்டரில் மிஸ் பண்ணாமல் பாருங்கள் நன்றி.  

இயக்குநர் விஜய் தமிழ்செல்வன் பேசியதாவது… நான் மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ்ஸுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான் யாரிடம் ஸ்கிரிப்ட் எடுத்து அலையவில்லை, இந்த நிறுவனத்திடம் மட்டும் தான் கதை சொன்னேன். கொரோனா உச்ச கட்டமாக சீனாவில் இருந்த காலத்தில் இந்தபடத்தை ஆரம்பித்தோம். இங்கு வராது என்று நினைத்தோம், கொரோனா வந்ததால் படம் லேட்டாகிவிட்டது. கிஷன் சார் மிகச் சிறந்த திறமைசாலி அவருக்கு கேமரா பயமே இல்லை. மிக அட்டகாசமாக நடித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் இருந்தது, எல்லோருக்கும் டி ஆர் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம் ஆனால் அவரே எழுதி பாடி விட்டார். எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம் இது. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.  இசையில் L.V.முத்து கணேஷ்  இரவு பகலாக உழைத்துள்ளார்கள். பாலா கிருஷ்ணா மனோஜ் எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். படத்தை நன்றாக எடுத்துள்ளோம் தியேட்டரில் வந்து பாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் H முரளி பேசியதாவது… இது என் குடும்ப விழா மாதிரியானது. தயாரிப்பாளர் ஜெயின் அவர்களை பல வருடங்களாக தெரியும்.  கிஷனை நாயகனாக்க பலதடவை முயற்சிகள் நடந்தது அது நடக்காமலே இருந்தது. ஆனால் இந்தப்படத்தை சத்தமே இல்லாமல் எடுத்து விட்டார்கள் கிஷன் பெரிய ஹீரோவாக வருவார், எல்லோருக்கும் வாழ்த்துகள்

எஸ் ஜே சூர்யா பேசியதாவது… ‘அஷ்டகர்மா’ விஜய் அவர்கள் நல்ல கதை செய்து அதை அழகான திரைக்கதையில் சொல்லியுள்ளார். காட்சிகள் பார்க்க நன்றாக இருக்கிறது. எல்லோருமே அவர்கள் மனம் சொல்வதை நோக்கி பயணம் செய்து வருகிறார்கள். கிஷன் செல்வாக்கு மிகுந்தவர்,  அவர் வந்து கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அவர் தன் லட்சியம் ஒன்றை நோக்கி ஆசைப்பட்டு பயணித்துள்ளார். கஷ்டப்பட்டு உழைத்துள்ளார். சினிமா ஏழை பணக்காரன் யாரையும் பார்க்காது பஸ் கண்டக்டரை சூப்பர் ஸ்டாராக மாற்றும். அந்த வகையில் உண்மையாக உழைக்கும் கிஷன் மிகப்பெரிய நடிகராக வர வாழ்த்துக்கள் நன்றி.

சித்ரா லக்‌ஷ்மண் பேசியதாவது….இது தமிழ் சினிமாவின் பல தயாரிப்பாளர்களுக்கு குடும்பவிழா ஏனெனில் பல படங்களுக்கு அவர்கள் உதவி செய்துள்ளார்கள். அவர்கள் வீட்டுப்பிள்ளை கிஷன் சொகுசாக வாழ்ந்த பிள்ளை, ஆனால் கடுமையாக இப்படத்திற்கு உழைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். அவர் உழைப்பு கண்டிப்பாக வெற்றி பெறும்,  டி ஆர் அவர்களையே உதாரணமாக சொல்லலாம், அவர் திரையுலகிற்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது இன்றும் அவர் பெயர் சொன்னால் கைதட்டலால் அரங்கம் அதிர்கிறது. அதே போல் கிஷன் அவர்களும் திரையுலகில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் அம்மா டி சிவா பேசியதாவது.. இன்று ஜெயின் ராஜ் ஜெயின் கனவு நனவாகியுள்ளது. 33 வருடங்கள் முன் அம்மா கிரியேஷன்ஸ் உருவாக பணம் தந்து உதவியவர்கள் ஜெயின் ராஜ் ஜெயின் தான் அதை மறக்க முடியாது. அவர்கள் சினிமாவில் எண்ணற்ற தயாரிப்பளர்களுக்கு உதவி செய்துள்ளார்கள். அந்த குடும்பத்தில் கிஷன் நன்றாக வரவேண்டும். அந்த குடும்பம் செய்த உதவிகள் இந்தப்படத்தை வெற்றி பெறச் செய்யும். இந்தப்படம் பார்க்க நன்றாக இருக்கிறது. இந்தப்படம் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி.

தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின்: எங்கள் குடும்ப விழாவுக்கு வந்த அனைவருக்கும் நன்றிகள். டி ஆர் அவர்களை வைத்து ஒரு படம் எடுத்துள்ளேன், இப்போது எங்கள் குடும்ப படத்தில் பாடி தந்துள்ளார், அவருக்கு நன்றி. இங்கு வந்திருக்கும் அனைவரிடமும் 40 வருடமாக பழகி வருகிறோம். எஸ் ஜே சூர்யா சாருக்கு கொரோனா பாஸிடிவ் இருந்தது,  வருவாரா என நினைத்தேன்,  நெகடிவ் வந்துவிட்டது கண்டிப்பாக வந்துவிடுவேன் என சொல்லி வந்திருக்கிறார் அவருக்கு நன்றி. அஷ்டகர்மா படம் நன்றாக வந்துள்ளது. கிஷன் எங்கள் குடும்ப பெயரை காப்பாற்றி மிகப்பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும், அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது… பல்லாண்டுகளாக சினிமா வாழ காரணம் ஜெயின் குடும்பம் தான். ஒரு தயாரிப்பாளர் பணம் கொண்டு வந்தால் தான் படமே நடக்கும், அப்படிபட்ட  தயாரிப்பாளர்களே பைனான்ஸியர் இடம் தான் நிற்பார்கள், அவர்கள் தான் பல தயாரிப்பாளரை தாங்கிப்பிடித்தார்கள். தமிழர்கள்  பேசுவதை விட சுத்தமாக தமிழ் பேசுவார்கள், எங்கள் சொந்தத்திலிருந்து வரும் கிஷனை நாங்கள் அனைவரும் வரவேற்கிறோம். சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்கள் 10 லட்சம் கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு தீபாவளி பரிசு தந்தார். இந்த குடும்பம் ஜெயிக்க வேண்டும் தமிழ் சினிமாவை வாழவைக்கும் குடும்பம் அதிலிருந்து வரும் கிஷன் ஜெயிப்பார். கிஷனிடம் ஹீரோவுக்கு உண்டான அத்தனை அம்சமும் நன்றாக இருக்கிறது. விஜய் தமிழ்செல்வன் பெயரில் அதிர்ஷ்டம் இருக்கிறது. அவர் நன்றாக படத்தை இயக்கியுள்ளார்.  கிஷன் நல்ல ஹீரோவாக வருவார் அதில் நம் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிப்பார்.

இயக்குநர் கல்யாண் பேசியதாவது…நமது பதம் சாரின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த குடும்பம் நிறைய சமூக சேவையும் செய்துள்ளது. நிறைய படங்கள் ஜெயிக்க இவர்கள் தான் காரணம் என் படம் உட்பட, அந்த குடும்பத்தில் இருந்து வந்துள்ள கிஷன் ஜெயிக்க வேண்டும் இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்

நடிகர், தயாரிப்பாளர் கிஷன் பேசியதாவது….கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, எனக்கு இது முதல் மேடை. இது எனது சிறு வயது கனவு. அப்பா படம் எடுக்கும்போது அர்ஜீன் சார் என்னை படத்தில் நடிக்கிறியா எனக் கேட்டார், நான் தலையாட்டினேன் அவரால் தான் அன்று மனதில் நான் நடிகனாக வேண்டும் என பதிந்து விட்டது. அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் டான்ஸ் நடிப்பு கற்றுக்கொண்டேன். அப்பாவிடம் நடிக்க வேண்டும் என்றேன் ஆனால் இப்போ வேண்டாம் என்றார். அப்புறம் கல்யாணம் ஆகி பிஸினஸில் போய் விட்டேன். மீண்டும் நடிக்க வேண்டும் என சொன்ன போது குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை, அவர்களை கன்வின்ஸ் செய்தேன். விஜய்யிடம் அஷ்டகர்மா கதை கேட்டேன், எனக்கு பிடித்தது. அவரும் புதுசு நானும் புதுசு இது செட்டாகுமா என தயக்கம் இருந்தது பைலட் பிலிம் எடுத்து பார்த்தேன். நன்றாக இருந்தது. அப்பா அநாவசிய செலவு செய்யாதே, தேவைகான செலவு செய் அப்போ தான் ஜெயிக்க முடியும் என்றார், அது என் மனதில் இருந்தது. ஒரு நல்ல டீம் கிடைத்தது நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நன்றாக நடித்திருக்கிறார்கள். அப்பாவோட ஆசிர்வாதம் எனக்கும் இருக்கிறது என நம்புகிறேன். படத்தில் ஒரு பாடல் தான், டி ஆர் அவரே எழுதி பாடி விட்டார் அதறகு நன்றி. இந்த வயதிலும் உற்சாகமாக இருக்கிறார். இந்தப்படம் பிப்ரவரி 11ல் வெளியாகிறது. தியேட்டரில் போய் பாருங்கள், உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

இயக்குநர் டி ஆர் ராஜேந்தர் பேசியதாவது…நான் ஏன் இந்தப்படத்திற்கு வந்தேன், நான் ஏன் திரையுலகிற்கு வந்தேன் எல்லாவற்றிற்கும் காரணம் உள்ளது. கிஷனுக்கும், மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ்ஸுக்கு வாழ்த்துக்கள். ஒலி நாடா வெளியீட்டு விழாவிற்கு செல்வதில்லை என முடிவெடுத்து இருந்தேன். என்னை பாட வைத்தீர்கள் என்னை எழுத வைத்தீர்கள் எழுதினேன். என் வாழ்வில் வசந்தத்தை தந்தவர் ஜெயின், அந்த குடும்பத்திற்காக தான் நான் பணியாற்றினேன். நம் முதலாளி வீட்டு பங்சன் போகலாம் என தான் வந்தேன். இங்கு வந்தவர்கள் அனைவரும் என்னை விட சிறப்பாக பேசிவிட்டார்கள். ஒரு வசந்த கீதம் படத்தில் சிலம்பரசனை நடிக்க வைத்தது இந்த குடும்பம் தான். அவர்கள் குடும்பத்து பையன் கிஷன் பெரிய வெற்றி பெற வேண்டும். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

தொழில்நுட்ப குழு

தயாரிப்பு – மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ்
கதை-எழுத்து-இயக்கம் – விஜய் தமிழ்செல்வன்
ஒளிப்பதிவு – R. b. குரு தேவ்
கலை – கிஷோர்
இசை – L. v. முத்து கணேஷ்
பட தொகுப்பு – மணி குமரன்
நிர்வாக தயாரிப்பு – பினு ராம்
சவுண்ட் மிக்ஸர் –  A.M ரஹமத்துல்லா
தயாரிப்பு மேற்பார்வை – A. m. a மாலிக்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)