அமானுஷ்யங்கள் நிறைந்த பேய் படம் “99/66” மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் ” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” இந்தப் படத்தில் சபரி, ரோகிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.*******
இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் -ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர். பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். தயாரிப்பு ஒருங்கிணைப்பு – மஹேந்திரன் கிரியேட்டிவ் டைரக்டர் – ரவி பார்கவன் தயாரிப்பு நிறுவனம் – மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட். இணை தயாரிப்பு – சுஜாதா மூர்த்தி கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.

