தோஹா, கத்தார்: மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மறைந்த நடிகரும் தலைவருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களை நினைவுகூரும் வகையில் “என்றென்றும் கேப்டன் என்ற தலைப்பில் கலாச்சார நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு 1,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரளாக கலந்துகொண்டு, தோஹாவில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குள்ள ஆழ்ந்த மரியாதையும் உணர்வுப்பிணைப்பையும் வெளிப்படுத்தினர். அரங்கம் முழுவதும் மக்களின் பெரும் வரவேற்பும், பாராட்டும் நிகழ்ச்சி முழுவதும் வெளிப்படையாகக் காணப்பட்டது. நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக, பிரபல திரைப்பட இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திருமதி ரோஜா செல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.******
‘என்றென்றும் கேப்டன்’ விஜயகாந்த் நினைவு நிகழ்ச்சியில் ஆர்.கே. செல்வமணி ரோஜா செல்வமணி
