“பிளாக் கோல்டு” திரைப்படத்தின் பதாகை வெளியானது

எம்.எம்.ஸ்டுடியோஸ் சார்பில் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ், அருள் டி. சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான மர்ம நாவலக உருவாகியிருக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் முதல் பதாகை  வெளியானது. அதில்  ஒரு படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை  அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது. நடிகர் வெற்றியின் ஆக்ரோசமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இருக்கும் சரக்கு கண்டைனரும் காட்சியின் வீரியத்தை காட்டுகிறது. இந்த பதாகை அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையம் முழுக்க பரவி  வருகிறது.ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்க்கு பதில் தேடி எந்த அளவிற்கு துணிகிறான் என்பதே இப்படத்தின் கதைக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக இருக்கும் சிறு விசயம் ஒன்று, எப்படி உலக வர்த்தகமாகி இருக்கிறது, அதன் பிண்ணனியில் இருக்கும் நிழல் உலக மாபியாக்கள் பற்றி கூறும் இப்படத்தை பரபரப்பான திரைக்கதையில் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது.*******

ஒரு சாதாரண நடுத்தர இளைஞனுக்கும் மிகப்பெரிய வணிக மாபியாக்களுக்கும் இடையே நடக்கும் அனல் தெறிக்கும் உண்மை சம்பவங்களை சொல்லும் இக்கதையில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் பிக்பாஸ் அபிராமி,துளசி,A.வெங்கடேஷ்,அருள் D சங்கர்,விஜய் டிவி ராமர்,சபிதா ராய்,ஜீவா ரவி,அஜித் விக்னேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்  இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மூன்று கட்ட படப்பிடிப்பாக ஏப்ரலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு  தற்போது இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது.

“பிளாக் கோல்டு” ன் பதாகையில்  நடிகர் வெற்றி முன்பு எப்போதும் இல்லாத தோரணையில் புதுமையாகயும்,இளைமையாகவும் இருக்கிறார். இது படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆவலை தூண்டியிருக்கிறது.

தொழில்நுட்பக்குழு விபரம் தயாரிப்பு – MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி இயக்கம் – தீரன் அருண்குமார் ஒளிப்பதிவு : சந்தோஷ்குமார் வீராசாமி  இசை – கவாஸ்கர் அவினாஷ் பாடல்கள் – மோகன்ராஜன் எடிட்டிங் – ராவணன் கலை- c.s.பாலசந்தர் சண்டைப்பயிற்சி – “மெட்ரோ” மகேஷ் மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)