குதிரைவால் திரைப்படம் விமர்சனம்

தமிழ் சினிமாவின் பாதையின் ஓரத்தில்,  ஒரு புதிய வழித்தடத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர். அந்தப்பாதையில் நாவல் ஆசிரியர்களும்,  நவீன கலை ஓவியங்களுக்கு விளக்கம் சொல்பவர்கள் மட்டும்தான் பயணிக்க முடியும். கதை இதுதான். கலையரசன் ஒரு கனவு காண்கிறார். அந்த கனவில் ஒரு குதிரை நிற்கிறது. அந்த குதிரைக்கு வால் இல்லை. தூக்கத்திலிருந்து எழுந்ததும் அந்த குதிரையின் வால் தனக்கு முளைத்திருப்பதைப் பார்த்து அதிச்சியடைகிறார் கலையரசன். அந்த வால் அவரைத்தவிர மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாது. தனக்கு குதிரை வால் இருப்பதை அவரது பாட்டி, ஆசிரியர் ஜோதிடர் மருத்துவர்களிடம் கூறுகிறார். ஆனால் மற்றவர்களின் கண்களுக்கு குதிரை வால் தெரியாததால் கலையரசனை மனநலம் பாதிக்கப்பட்டராக கருதி அவருக்கு ஒரு சில விளக்கங்களை சொல்லியனுப்புகிறார்கள். கடைசிவரையிலும் இதுதான் கதை.

கலையரசனின் நடிப்பு பாராட்டுத்லுக்குறியது. குதிரைவால் அவரது முதுகை தட்டும் போது அவரது உடலசைவை அற்புதமாக காட்டியிருக்கிறார். குதிரைவால் கலைப்பிரியர்களுக்கு ஒரு காவியம். பாமரர்களுக்கு குதிரைவால் குரங்கு வரைந்த ஓவியம்.

மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம். நீ சொன்னால் அது காவியம்  என்ற சினிமா பாட்டு வரிகள் நினைவுக்கு வருகிறது. ஏனென்றால் படத்தை தயாரித்தவர் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்.