இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் “தண்டகாரண்யம்”. இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டுக்கு தயாராகும் நிலையில் இந்த படத்திற்கு U/A சான்றிதழ் சென்சார் வழங்கியுள்ளது. இதன் அறிவிப்பை வெளியிட்ட குழுவினர் “அமரன்கள் செய்த அநீதிகளை பேசும் தண்டகாரண்யம்” என்கிற தலைப்பில் இன்று வெளியிட்டுள்ளனர். இந்தபடத்தின் படப்பிடிப்பு முழுக்க காடுகளும், மலைப்பிரதேசங்களிலும், மலைக்கிராமங்களிலும், நடைபெற்று முடிந்திருக்கிறது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.*****
தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” படத்திற்கு யு.ஏ.சான்றிதழ்
