திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா இ.ஆ.ப. வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மழை நீர் வடிகால் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு நான்கு மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையில், மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கடந்த 23-09-2025 அன்று ஆய்வு கூட்டம் நடத்த ஆணையாளர் மருத்துவர் மோனிகா ராணா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 24 மற்றும் 25 ஆகிய இருதினங்களில் நான்கு மண்டலங்களிலும் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு மாமன்ற உறுப்பினர்களின் அறிவுறைக்கேற்ப மழைநீர் நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து மழைநீர் ஒடைகளை தூர்வாரும் பணிகள் மற்றும் மழைநீர் செல்லும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து நான்கு மண்டல பகுதிகளிலும் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் நேற்று (12-10-2025) வார்டு 42 பெருமாள்புரம் இரயில்வே பீடர் ரோடு மற்றும் வார்டு 43 தெற்கு புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் ஒடையினை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் பிற வார்டு பகுதிகளில் மழை நீர் தேங்க கூடிய இடங்களை கண்டறிந்து தூர்வாரும் பணி போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.தொடர்ந்து (13-10-2025) ஆணையாளர் தச்சநல்லூர் மண்டலம் சந்திப்பு பேருந்து நிலைய பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் மழைநீர் வடிகால் ஓடை கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர்கள் சுந்தர், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நித்தியபாலையா, கண்ணன், உதவி ஆணையாளர் து.சந்திரமோகன், உதவி செயற்பொறியாளர் அலெக்ஸாண்டர், உதவி பொறியாளர்கள் சிவசுப்பிரமணியன்,பட்டுராஜன் உட்பட பலர் உடனிருந்தார்கள்.