“ஜாக்கி” திரைப்படம் விமர்சனம்

தங்க முகையதீன்

———–

பிரேமா கிருஷ்ணதாஸ், சி.தேவதாஸ், ஜெயா தேவதாஸ் ஆகியோரின் தயாரிப்பில் பிரகபால் இயக்கத்தில் யுவண் கிருஷ்ணா, ரித்தன் கிருஷ்தாஸ், அம்மு அபிராமி, காளி, மதுசூதனன் ராவ், சித்தன் மோகன், சரண்யாரவி ஆகியோரின் நடிப்பில் பெளிவந்திருக்கும் படம். “ஜாக்கி”. கதாநாயகன் யுவண் கிருஷ்ணா மதுரையில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். ரித்தன் கிருஷ்ணதாஸ் வசதிபடைத்தவர். இவ்விருவரும் மதுரையில் நடக்கும் கிடா சண்டை போட்டியில் பங்கு கொள்கிறார்கள். யுவண் கிருஷ்ணாவை ரித்தன் ஏளனமாக நினைக்கிறார். ஆனால் கிடா சண்டையில் யுவண் கிருஷ்ணாவின் கிடா, ரித்தனன் கிடாவை முட்டி அதன் கொம்பை முறித்துவிட்டு ஜெயிக்கிறது. இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளாத ரித்தன், யுவண் கிருஷ்ணாவை கிடாச் சண்டையில் தோற்கடிக்க குறுக்கு வழியில் முயற்சிக்கிறார். இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்கிறார்கள். இவர்களின் பகையை ஒரு முடிவுக்கு கொண்டுவர ஊர் தலையாரியான மதுசூதன்ராவ் ஒரு முடிவு எடுக்கிறார். அது என்ன முடிவு? கிடாச்சண்டை என்ன ஆனது? என்பதுதான் கதை. மதுரை மாவட்டத்தில் கோயில் விழாக்களில் நடக்கும் கிடாச்சண்டைகள் பரிணாம வளர்ச்சி பெற்று ஒரு தனி விளையாட்டாக மாறியுள்ளது. அந்த கிடாச் சண்டையை தத்ரூபமாகவும் உண்மைக்கு மிக நெருக்கமாகவும் படமாக்கி திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் பிரகாபால்.  கதாநாயகனாக நடித்திருக்கும் யுவண் கிருஷ்ணதாஸ் மதுரை மைந்தனாகவே படம் முழுக்க காட்சி தருகிறார். துடிப்பான நடிப்பினால் பார்வைய்ளர்களின் கவனத்தைப் பெறுகிறார். வில்லனாக நடித்திருக்கும் ரித்தன் கிருஷ்ணதாஸ் ஒரு சராசரியான வில்லத்தனத்திலும் மிளிர்கிறார். ஆம்பளை இல்லாத வீட்டுக்குள் புகுந்து அட்சகாசம் செய்யும் காட்சியில் பார்வையாளர்களின் கோபத்துக்கே ஆளாகும்படி தனது நடிப்பில் மிளிர்கிறார் வில்கன் ரித்தன் கிருஷ்ணதாஸ். அம்மு அபிராமியின் காதல் மொழிபேசும் கண்களை ரசிக்க முடிகிறது. அளவான நடிப்பை கொடுத்து படத்தை  தேக்க நிலையிலிருந்து மீட்டெடுக்கிறார். மதுரை மண்ணின் வாசத்தை நுகர்ச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் உதயகுமார். பின்னணி இசை படத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டிலொன்றான கிடாச்சண்டை விளையாட்டை கௌரவப்படுத்தியிருக்கும் இயக்குநர் பிரகபால் தமிழர்களின் இதய சிம்மானத்தில் அமர்ந்துவிட்டார்