அடிதடி, வெட்டு குத்து அருவா – சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் “ஆல்பாஸ்” . வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பேசும் படமாக உருவாகி வருகிறது. இபடத்தை மைதீன் இயக்குகிறார். ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா ஆர். தயாரித்துள்ள படத்திற்கு “ஆல் பாஸ் ” என்று பெயர் சூட்டியுள்ளனர். துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜனனி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, இயக்குனர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா ஆர், சத்யா, சரத் லொகிட்ஷவா ரோஷன் பஷீர், அருவி மதன், இயக்குனர் மூர்த்தி, கலையரசன் கண்ணுசாமி, மாஸ்டர் ஸ்பைடர் சஞ்ஜெய், கோகுல், நிகில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.*********
கலகத் தலைவன், அண்ணாதுரை தகராறு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார். பசங்க படத்திற்கு எடிட்டிங் செய்த S.பாஸ்கர் இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குனராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார். பிரபல நடன இயக்குனர் ராதிகா இந்த படத்திற்கு நடனம் அமைத்துள்ளார் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டராக மெட்ரோ மகேஷ் பணியாற்றியுள்ளார்.
மேக்கப் – L.V.ராஜா உடைகள் – A.S.வாசன் ஸ்டில்ஸ் – அண்ணாதுரை விளம்பர வடிவமைப்பு – மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் தயாரிப்பு – மோகனா. R கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.
படம் பற்றி இயக்குனர் மைதீன் பகிர்ந்தவை… ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த படம் இது. வடசென்னை என்றாலே அடிதடி வெட்டு குத்து, ரத்தம் பகை கொலைன்னு தமிழ் சினிமாவில் காட்டி இருக்காங்க முதல்முறையா இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம். அப்படி பகை வன்முறை இல்லாத வடசென்னையில் வாழும் மூன்று குடும்பங்கள் பாசம், நட்பு, சந்தோஷம், துக்கம் என்று வாழ்க்கையை அவர்களது போக்கில் வாழ்கிறார்கள் ஆனால் இயற்கை அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறது, அது என்ன டெஸ்ட் அதில் பாஸ் ஆனார்களா இல்லையா என்பதே இந்த படத்தின் திரைக்கதை. குடும்ப உணர்வுகளை சினிமாவில் சொல்லிய அனைத்து படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளது அந்த வரிசையில் இந்த ஆல் பாஸ் படமும் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் இயக்குனர் மைதீன். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் மற்றும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர் அது தற்போது இணையதளத்தில் அனைவரது கவனத்தையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

