நிலைத்தன்மைக்கான பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் யுனெஸ்கோ இருக்கை தலைவர் பேராசிரியர் ஆர். அருண் பிரசாத் இந்த மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக வருகை தந்த புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பனிதி பிரகாஷ் பாபு, முதன்மை விருந்தினர்களான இஸ்ரோவின் முன்னாள் முதன்மை பொது மேலாளர் டாக்டர் என். சிவசுப்பிரமணியன், பேராசிரியர் ரவி குமார் அஸ்தானா (அறிவியல் நிறுவகம், பி.எச்.யூ), மற்றும் புல முதல்வர் (பொறுப்பு ) பேராசிரியர் பி.ம். ஜாபர் அலி உள்ளிட்ட பங்கேற்பாளர்களையும்,மற்றும் விருந்தினர்களையும் வரவேற்றார். இந்த மாநாடு நடைபெற பேருதவியாக இருந்த பிரான்ஸ் மார்குவெட், நிதிஉதவி செய்த புதுச்சேரி முதலமைச்சர் திரு ரங்கசாமி ஆகியோருக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய திரு அருண் பிரசாத் கார்பன் அடிப்படையிலான எரிபொருட்களிலிருந்து பசுமையான மற்றும் சுத்தமான தொழில்நுட்பங்களுக்கான மாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சூரிய சக்தி, காற்றாலை, உயிரி எரிசக்தி, நீர்மின் சக்தி, கடல், அலை, கழிவுகளை எரிசக்தியாக மாற்றுதல், ஹைட்ரஜன் எரிசக்தி, மற்றும் கார்பன் சேமிப்பு தொழில்நுட்பங்களில் புதுமைகள் மற்றும் முன்னேற்றங்கள் நிலைத்த எதிர்காலத்திற்குத் தேவையானவை என்று கூறினார். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி பிரகாஷ் பாபு தலைமை உரையை வழங்கி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலைத்தன்மை தொடர்பான துறையின் அர்ப்பணிப்பான முயற்சிகளை பாராட்டினார். மேலும், இந்திய பல்கலைக்கழக அமைப்பில் துறையின் தனித்துவத்தை எடுத்துரைத்தார். புதுமையான கருத்துக்கள், ஒத்துழைப்பு கற்றல் மற்றும் அறிவு பகிர்வின் மூலம் நிலைத்தன்மை முயற்சிகளைஇந்த இரண்டு நாள் நிகழ்வு, முக்கியமாக முன்னேற்ற வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை அடைவதற்கான உலகளாவிய ஒத்துழைப்பு முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.