பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஏப்.10ல் வெளியீடு

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது: “நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது.*****

அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene-ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன். அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம். இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது.