பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில் ஹரி மகாதேவன் இயக்கத்க்தில் பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி, பிரபு சாலமன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ்வர், லோகி, அஜய் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “யெல்லோ”. பூர்ணிமா ரவி ஒரு வங்கியில் கடனை வசூலிக்கும் பிரிவில் வேலைபார்க்கிறார். காதலில் தோல்வியுற்ற பூர்ணிமா, விரக்த்தியில் கடன் வாங்கியவர்களிடம் தொலைபேசியில் பேசி கடுமையாக நடந்து கொள்கிறார். “மன அமைதி பெற உன் தோழிகளை சந்தித்து பேசிவிட்டு வா” என்று வயோதிக தந்தை டெல்லி கணேஷ் அறிவுரை கூற, அதன்படி தனது பழைய போட்டோ ஆல்பத்தை எடுத்துக் கொண்டு கேரளாவிலிருக்கும் தோழி லீலா சாம்சனை சந்திக்க செல்கிறாள். அங்கு அவரோ தன் இளமைக்கு தீனிபோடும் ஒரு ஆண் நண்பனோடு பழகி வருகிறாள். அவளின் சிபாரிசின் பேரில் வைபவ்வை சந்திக்க செல்கிறாள் பூர்ணிமா. வைபவ் தான் வேலைபார்க்கும் வங்கியில் மோட்டார் சைக்கிளுக்கு கடன் வாங்கி இன்னும் அதை அடைக்காமல் இருப்பவர் என்பது பூர்ணிமாவுக்கு தெரியவருகிறது. வைபவுக்கும் தன்னை தொலைபேசியில் கடனை கட்டச் சொல்லி திட்டி தீர்த்தவர் என்பதும் தெரியவருகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் யார் என்பதை புரிந்துகொண்டு தனது பயணத்தை மோட்டார் சைக்கிளில் தொடர்கிறார்கள். பயணத்தின் முடிவு என்ன ஆனது என்பதுதான் கதை. திரைக்கதை முழுவதும் வசனகர்த்தாவான இயக்குநர்தான் உண்மையான கதாநாயகன். “யெல்லோ” அதாவது “மஞ்சள்” என்பது வெளிப்படையானது. கடனை கட்ட முடியாதவர்கள் மஞ்சள் நோட்டீசை கொடுத்துவிடுவார்கள். அப்படி கொடுத்தவர்களின் வாழ்வியல் அனைத்தும் வெளிப்படையான திறந்த புத்தகம்போல் ஆகிவிடும். ஒவ்வொரு மனிதனின் வாழ்வும், ஒலிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக இருப்பதை திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஹரி மகாதேவன். படமுழுவதும் சலிப்புத்தட்டாமல் ரசிப்புத்தன்மையுடன் செல்கிறது. கேரள கானகத்தின் செழிப்பு மிகுந்த அழகை தன் காமிராவில் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் அபி அத்விக்கை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்க, காண கண்கோடி வேண்டும். அவ்வளவு அற்புதமாக படமாக்கியிருக்கிறார். காட்டுப்பாதையில் செல்லும் தொடர்வண்டி பயணத்தில் பூர்ணிமா, தன் மார்பளவோடு தன் முகத்தை வெளியே நீட்டி இயற்கையை ரசிக்கும் காட்சி பார்வையாளர்களின் கண்களைவிட்டு நீங்காது. படத் தொகுப்பும் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. படம் பார்க்கும் அனைவருக்கும் தன் வாழ்க்கயில் நடந்த அல்லது நடக்கின்ற சம்பவங்களை நினைவூட்டும்
“யெல்லோ” திரைப்பட விமர்சனம்
